இந்த குண்டு வெடிப்பு வழக்கை பியர்ஸ் பிராஸ்னன் விசாரிக்கிறார். ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், தன் மகளை கொன்றவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தானே களமிறங்குகிறார் ஜாக்கிசான். இந்த சம்பவத்தை விசாரிக்கும் பியர்ஸ் பிராஸ்னனுக்கு கொலையாளிகள் யார் என்று தெரியும் என யூகிக்கிறார் ஜாக்கிசான்.
இதனால், இவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலுக்கு மத்தியில் அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் யார் என்பதை ஜாக்கிசான் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

ஸ்டீபன் லெதர் எழுதிய 'தி சைனாமேன்' என்கிற நாவலை படமாக்கி இருக்கிறார் இயக்குநர் மார்ட்டின் கேம்ப்பெல். பியர்ஸ் பிராஸ்னனை வைத்து கோல்டன் ஐ; டேனியல் கிரெய்கை வைத்து கேசினோ ராயல் என இரு ஜேம்ஸ்பாண்ட் படங்களை இயக்கிய மார்ட்டினின் படத்தில் அதிரடி இருக்குமென பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சுகிறது.
அறுபது வயதைக் கடந்தாலும், இன்னும் ஜாக்கி சானிடம் ரசிகர்கள் காமெடி சண்டைக் காட்சிகளை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவரோ, சண்டைக் காட்சிகளில் இன்னும் அதிரடியில் மிரட்டுகிறார். காட்டுக்குள் நடக்கும் சண்டைக் காட்சி, அபார்ட்மென்ட்டில் நடக்கும் இறுதி சண்டை, என ஜாக்கி சான் மாஸ் காண்பித்திருக்கிறார்.

பியர்ஸ் பிராஸ்னனை நல்லவராகவும் அதே சமயம் வில்லனாகவும் காண்பித்திருக்கிறார்கள். பிராஸ்னனின் மனைவி, ஜாக்கி, அயர்லாந்து போலீஸ், பிராஸ்னனின் உயர் அதிகாரி என அனைவருக்கும் ஏகத்துக்கு பிராஸ்னனை மிரட்டுவது மட்டும் ஒரே வேலை.
மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அதிகமாக லாஜிக் களேபரங்களைக் குறைத்து, சுவாரஸ்யங்களைச் சேர்த்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘தி ஃபாரீனர்’ சிறப்பு.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்