பரத்துக்கும், ருஹானி ஷர்மாவுக்கும் ஆரம்பத்தில் இருந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒரு குழந்தைக்கு பரத்தின் ரத்தம் தேவைப்படுகிறது. ருஹானி கேட்கும் போது மறுக்கும் பரத், பின்னர் குழந்தைக்கு ரத்தம் கொடுத்து விடுகிறார். பரத் மீது கோபம் இருந்தாலும், அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்படுகிறார்.

பரத்தோ ருஹானியின் காதலை ஏற்காமல் இருக்கிறார். பரத்தை பொருத்தவரை காதல் என்பது திருமணத்திற்கு முன்பு எல்லா விஷயங்களும் நடக்க வேண்டும் என்று எண்ணத்துடன் இருக்கிறார். ஆனால், ருஹானி திருமணத்திற்குப் பிறகுதான் எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
ஒரு கட்டத்தில் ருஹானியின் காதலை பரத் ஏற்றுக் கொள்கிறார். ஆனால், திருமணத்திற்கு முன்பே ருஹானியுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதனால், இருவருக்குள் மோதல் ஏற்பட்டு பிரிகிறார்கள். இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பரத், சாதுவாகவும், ஆக்ஷன் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். வழக்கமான அவரது பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ருஹானி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றொரு கதாநாயகியாக வரும் அங்கனா ராய் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார்.
தற்போதுள்ள இளைஞர்கள் காதலை எப்படி பார்க்கிறார்கள் ஏன்பதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ரவி பார்கவன். முழுக்க முழுக்க கல்லூரியிலேயே படத்தை எடுத்திருக்கிறார். உண்மையான காதலுக்கும், பொய்யான காதலுக்கும் வித்தியாசம் இல்லாமல் இருக்கிறது என்ற கருத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், திரைக்கதையை போதிய சுவாரஸ்யம் இல்லாமல் உருவாக்கி இருக்கிறார். பரத்தை தவிர மற்றவர்கள் புதுமுகங்கள் என்பதாலும், அவர்களின் டப்பிங் சரியாக எடுபடாததாலும், படத்தை ரசிக்க முடியவில்லை.

அன்பு ராஜேஷ், கே.விஜய் இசையில் பாடல்கள் அனைத்தும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். முனீர் மாலிக்கின் ஒளிப்பதிவு சுமார் ரகம்.
மொத்தத்தில் ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ மக்கு.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்