இந்நிலையில், போலீஸ் அதிகாரி ஒருவர் கிஷோர் ஊரில் உள்ள 4 பேரை என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக் கொன்றுவிடுகிறார். இந்த சம்பவம் குறித்து நீதிபதி அஜய் ரத்னம் விசாரிக்கிறார். இதுகுறித்து ஊர் மக்கள் ஒவ்வொருவரிடமாக விசாரிக்கும் போது அந்த ஊரில் நடந்த சம்பவங்கள் குறித்த உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவருகிறது. அதில் கிஷோருக்கும் அவரது நெருங்கிய நண்பரான தருண் சதாரியாவுக்கும் இடையே ஏற்படும் மோதல் ஏற்படுகிறது. அதில் தருண் சதாரியா இறந்து விடுகிறார். இதையடுத்து கிஷோர் மற்றும் அவரது மனைவியான நாயகி யாக்னா ஷெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

சிறையிலேயே அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை தருண் சதாரியாவின் பெற்றோர்களிடம் வளர்கிறான். அவர்கள் சிறுவயதில் இருந்தே அந்த குழந்தையிடம் கிஷோரை கொல்ல வேண்டும் என்ற நஞ்சை விதைக்கிறார்கள். அதாவது தனது மகனை கொன்றதற்கு பழிவாங்க கிஷோரின் மகனையே கிஷோருக்கு எதிராக திருப்பி விடுகின்றனர். அதற்கேற்றாற் போல் கிஷோரின் மகனும் தாய், தந்தையை கொல்ல துடிக்கிறான். அதேநேரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவரும் கிஷோரை கொல்ல முயற்சிக்கிறார்.
இறுதியில், மகனே தந்தையை கொன்றானா? அல்லது உண்மையை அறிந்து தனது பெற்றோருடன் சேர்ந்தானா? போலீசார் கிஷோரை என்கவுண்டர் செய்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கிராமத்து தலைவராக வரும் கிஷோர் கதாபாத்திரம் படத்தை முன்னெடுத்து செல்கிறது. படம் முழுக்க தனது நடிப்பால் கிஷோர் ஆதிக்கம் செலுத்தி நடித்திருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. கிஷோருக்கு மனைவியாக நடித்திருக்கும் யாக்னா ஷெட்டிக்கு பெரிய கதாபாத்திரம் அமையவில்லை என்றாலும், அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அஜய் ரத்னம் அலட்டல் இல்லாமல் நீதிபதிக்கு உண்டான தோற்றத்துடன் சிறப்பாக நடித்திருக்கிறார். கிஷோருக்கு ஈடுகொடுக்கும்படியாக தருண் சதாரியா தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.
திருட்டுத் தொழிலை பிழைப்பாக கொண்ட கிராமத்தை கொண்டு பொட்டல்காடு போன்ற இடத்தில் படத்தை எடுத்திருப்பது சிறப்பு. மேலும் படம் முழுக்க ஒரு வறட்சிப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டிருப்பது படத்தின் கதையோடு ஒன்றியிருக்கிறது. படத்தின் திரைக்கதை விறுவிறுப்பின்றி மெதுவாக செல்வதால் படம் ரசித்து பார்க்கும்படியாக இல்லை. ஆவணப்படத்தை பார்த்தது போன்ற அனுபவமும் ஏற்படுகிறது.

படம் பொறுமையாக சென்றாலும் இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை படத்தை மென்மையாக கொண்டு செல்வதால் படத்தின் போக்கு ஏற்படியாக இருக்கிறது. புஷ்பராஜ் சந்தோஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `களத்தூர் கிராமம்' வறட்சியை ரசிக்கலாம்.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்