சிறுவயதிலேயே ஜெயிலுக்கு சென்று வந்ததால் வளரும் போதே ரவுடியாக வளர்கிறார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த நாயகி தீர்த்தாவிற்கும் காதல் ஏற்படுகிறது. இருவரும் காதலித்து வரும் நிலையில், கோம்பேவின் தம்பி, நாயகியை அடைய விரும்புகிறார். இந்த விஷயம் சார்லஸ் அருணுக்கு தெரிந்து இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது.
இந்த சண்டையில், எதிர்பாராத விதமாக கோம்பேவின் தம்பி இறந்து விடுகிறார். இதனால், சார்லஸ் அருணை தீர்த்து கட்ட முடிவு செய்கிறார் கோம்பே. இறுதியில் சார்லஸ் அருணை கோம்பே கொன்றாரா? நாயகன் சார்லஸ் அருணும், நாயகி தீர்த்தாவும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சார்லஸ் அருண் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் தீர்த்தா பாவாடை தாவணியில் கிராமத்து பெண் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கோம்பேவாக வரும் ஹாபிஸ் எம்.இஸ்மாயில் வில்லத்தனத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. இவரே இப்படத்தை இயக்கி ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்.
கிராமத்தில் ஒரு ரவுடியின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை திரைக்கதையாக எடுத்திருக்கிறார். படம் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்றாலும் பிற்பாதியில் திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இதை சரி செய்திருந்தால் ரசித்திருக்கலாம். இவரின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி உள்ளது.
அனுப் ரோக்வெல், டென்னிஸ் ஜோசப், கயோஸ் ஜோன்சன் ஆகியோரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையையும் தேவையான அளவிற்கு கொடுத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘கோம்பே’ புது முயற்சி.
மேலும் செய்திகள்
- செவன்ஸ் போட்டியில் விளையாடும் கதிர் - ஜடா விமர்சனம்
- ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்ட இளைஞனின் காதல்- தனுசு ராசி நேயர்களே விமர்சனம்
- குண்டு என்ன ஆனது?- இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்
- வீரமான தாதா உடம்பினில் கோழையான ஒருவரின் ஆவி செய்யும் சேட்டை - மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் விமர்சனம்
- நடிகையை காதலிக்கும் இளைஞன் சந்திக்கும் பிரச்சனைகள்- எனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்