இந்நிலையில், சில வருடங்கள் செல்ல தேவாலயத்தைச் சேர்ந்த மதர் மற்றும் ஆறு குழந்தைகளும் அந்தோணியின் வீட்டில் வந்து தங்குகின்றார். அவர்களிடம் குறிப்பிட்ட ஒரு அறையைக் காட்டி அந்த அறையைத் தவிர, அனைத்து பகுதிகளையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்தோணி கூறுகிறார். இந்நிலையில், அந்த பாதிரியாருடன் வந்த சிறுமிகளில் கால் ஊனமான ஒரு சிறுமி அந்த அறையை திறப்பதால் அனைவரும் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளுகிறார்கள்.

அந்த அறையில் உள்ள ஒரு அலமாரியில் இருக்கும் பொம்மை மூலம் இந்த பிரச்சனை ஆரம்பமாகிறது. இதுகுறித்து அந்த சிறுமி மற்றவர்களிடம் தெரிவித்தும், அதை யாரும் பொருட்படுத்தாததால் அந்த பொம்மையில் இருக்கும் ஆன்மா அந்த சிறுமியின் உடலில் புகுந்து விடுகிறது. அதனால் ஏற்படும் பிரச்சனை, உயிரிழப்பு என அவர்கள் சந்திக்கும் பிரச்சனை தான் படத்தின் மீதிக்கதை.
படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக வரும் அந்தோணி லாபகலியா, மிராண்டா ஓட்டோ, ஸ்டெப்னி சிக்மேன், டலிதா பேட்மேன், சமாரா லீ, லூலு வில்சன், டலிதா பேட்மேன் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களுமே சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

டேவிட் எப். சாண்ட்பெர்க் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கதை பெரிதாக இல்லாவிட்டாலும், படத்தில் திகிலுக்கு பஞ்சமில்லாமல் இருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது. திடீர் திடீரென நிகழும் திகில் காட்சிகள் பார்ப்போருக்கு பயத்தை உண்டாக்குகிறது.
பெஞ்சமின் வால்பிஷின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. மேக்ஸிம் அலெக்சாண்டரின் ஒளிப்பதிவில் திகில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `அனபெல்லா கிரியேஷன்' திகில் குறைவுதான்.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்