அந்த ஆசிரமத்தை கைப்பற்றுவதற்கு, அந்த ஊரில் வசிக்கும் செல்வந்தரான காக்கா ஆசைப்படுகிறார். இதனால், நாயகிக்கும் ஆசிரமத்திற்கும் பல்வேறு இடைஞ்சல்களை கொடுக்கிறார். இதையெல்லாம் நாயகனிடம் முறையிடுகிறாள் நாயகி. ஆனால், நாயகனோ அவளது பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாததுபோல் நடந்து கொள்கிறார். இதனால் நாயகன் மீது நாயகிக்கு வெறுப்பு வருகிறது.

ஆனால், மறுநாள் ஆசிரமத்தை தாக்க வரும் காக்காவின் ஆட்கள் அனைவரையும் நாயகன் அடித்து துவம்சம் செய்கிறார். அதன்பிறகு, ஆசிரமத்தை தாக்க சொன்ன காக்காவை தேடி அவரது வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்றதும், காக்காவின் அண்ணன் நாயகனை முன்பே சந்தித்ததுபோல் கூப்பிட்டு தன்னுடன் அழைத்து செல்கிறார்.
பிறகு நாயகன் அவர்களிடமே வேலைக்கு சேர்கிறார். இது நாயகிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. காக்காவிடம் நல்ல பிள்ளையாக நடந்துகொள்ளும் நாயகன், நாயகியிடமிருந்து ஆசிரமத்தை கைப்பற்றி அவர்களிடம் ஒப்படைப்பதாக கூறிவிட்டு செல்கிறார்.

அதன்பிறகு உண்மையில் என்ன நடந்தது? நாயகன் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்? என்ன காரணத்திற்காக அவர் இந்த கிராமத்திற்கு வந்தார்? அவருடைய தங்கையை மருத்துவ படிப்பு படிக்க வைக்கவேண்டும் என்று அவரது நினைவில் அடிக்கடி வருவதன் காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனான நிரஞ்சனே இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். பார்ப்பதற்கு ஹீரோவுக்குண்டான தோற்றம் இருந்தாலும், நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பான அறிமுகமாக இருந்திருக்கும். நீதான் ராஜா என்ற தலைப்பிற்கு ஏற்ப, படத்தில் இவரே ராஜாவாக வலம்வர முயற்சி செய்திருக்கிறார். அதற்காக படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் இவரை புகழ்பாடுவதாகவே அமைத்திருப்பது வெறுப்பைத்தான் வரவழைத்திருக்கிறது. அதேபோல், படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் கோர்வை இல்லாமல் தனித்தனியாக கொடுத்திருப்பது படத்தை பார்ப்பதற்கே தடையாக நிற்கிறது.

நாயகி காயத்ரி ஒருசில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைக்கிறார். அதேபோல் நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் லீமா செண்டிமெண்ட் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து நடித்திருக்கலாம். நாயகனின் நண்பனாக வரும் ரவிசாந்த் நிறைய படங்களில் பார்த்த முகம்தான். நடிப்பில் ஓகே சொல்ல வைத்திருக்கிறார். காக்காவாக நடித்திருப்பவர் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அதேபோல், அவருடைய அண்ணனாக வருபவரும் ஆரம்பத்தில் மென்மையானவராகவும், பிறகு மிரட்டலாகவும் வந்து கவர்கிறார்.
தஷியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் பெரிதாக மிரட்டல் இல்லை. தினேஷின் ஒளிப்பதிவும் பாராட்டும்படியாக இல்லை.
மொத்தத்தில் ‘நீதான் ராஜா’ முடிசூடவில்லை.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்