ஒருகட்டத்தில் அவர், அம்மா மீது வைத்திருக்கும் பாசம், பெண்கள் மீது காட்டும் அக்கறை இவையெல்லாவற்றையும் நேரில் பார்க்கும் நாயகிக்கு அவரை பிடித்துப்போகவே காதலிக்க தொடங்குகிறாள். பாசத்துக்காக ஏங்கும் நாயகனும் அவளது காதலை ஏற்றுக் கொள்கிறார்.

இந்நிலையில் நாயகன், அம்மா பாசத்துக்காக ஏங்கிக் கொண்டு, அவருக்கு ஏதாவது செய்யவேண்டும் என நினைக்கிறார். ஆனால், அவனது அம்மாவோ இவனை வெறுத்து ஒதுக்கிறாள். இந்நிலையில், இவனுடைய தொல்லையில் இருந்து விடுபட, நாயகனுக்கு திருமணம் செய்துவைத்துவிட்டால் சரியாகிவிடும் என்று முடிவெடுக்கிறார் நாயகனின் அம்மா.
அதற்காக ஒரு பெண்ணும் பார்க்கிறார். இதை நாயகனிடம் சொல்ல, இதுநாள் வரை தன்னை வெறுத்து ஒதுக்கிய அம்மா, இன்று தனக்காக பார்த்திருக்கும் பெண்ணை திருமணம் செய்துகொண்டால் அவளது பாசம் கிடைக்கும் என்று நினைக்கும் நாயகன், நாயகியுடனான காதலை முறித்துவிட்டு, அம்மா பார்த்த பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுக்கிறான் நாயகன்.

இறுதியில், அம்மா பார்த்த பெண்ணை நாயகன் திருமணம் செய்தாரா? அவரது காதல் என்னவாயிற்று? அம்மாவின் பாசத்திற்காக ஏங்கிய நாயகனுக்கு அது கிடைத்ததா? எதற்காக அந்த தாய் தனது மகனை வெறுத்து ஒதுக்குகிறாள்? என்ற கேள்விகளுக்கு விடை கொடுத்திருக்கிறார்கள்.
நாயகன் அரவிந்த் ரோஷன் அம்மா பாசத்துக்கு ஏங்கும் காட்சிகளில் எல்லாம் ரொம்பவும் எதார்த்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில்தான் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். நடனமும் முடிந்தளவுக்கு முயற்சி செய்திருக்கிறார்.
நாயகி கீர்த்தி ஷெட்டி அழகு பதுமையாக வந்துபோயிருக்கிறார். படத்தில் இவருக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதை சரியாக புரிந்துகொண்டு அழகாக நடித்திருக்கிறார். படத்தில் பாராட்டப்பட வேண்டியவர் நாயகனின் அம்மாதான். ஏற்கெனவே நிறைய படங்களில் அவரது நடிப்பு ரொம்பவும் எதார்த்தமாக அமைந்திருப்பதை பார்த்திருக்கிறோம். இந்த படத்திலும் அதே எதார்த்தத்தை பதிவு செய்திருக்கிறார்.

நெல்லை சிவா - ஷகிலா ஆகியோரின் காமெடி பெரிய அளவில் எடுபடவில்லை. மற்றபடி படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் அனைவரும் புதுமுகங்கள் என்பதால் அவர்களிடமிருந்து பெரிதாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை.
இயக்குனர் ரா.ஆனந்த் அம்மா பாசம், அதனூடே காதல் இரண்டும் கலந்து ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். படத்திற்கு பெரிய பலமே வசனங்கள்தான். வசனங்கள் ஒவ்வொன்றும் அழுத்தமாக அமைந்திருக்கிறது. மற்றபடி, திரைக்கதையில்தான் படத்தை ரசிக்க முடியாமல் செய்திருக்கிறார். அதேபோல், ஒருசில காட்சிகள் தமிழ் சினிமாவில் திரும்ப திரும்ப பார்த்து சலித்துப்போன காட்சிகளாகவே வருவதால், பெரிதாக ஈர்ப்பு இல்லை.
ஜீவனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ரா.ஆனந்தின் ஒளிப்பதி பரவாயில்லை ரகம்தான்.
மொத்தத்தில் ‘செவிலி’ பாசப்பிணைப்பு.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்