அந்த அறைக்குள் சென்றவுடன் 8 பேருக்கும் தான் யார் என்பதும், தன்னுடைய பின்புலம் என்னவென்பதும் மறந்துவிடுகிறது. ஆனால், நம்மில் யாரோ ஒருவர் மட்டும்தான் வெளியே செல்ல முடியும் என்பதுமட்டும்தான் தெரிகிறது. அப்படியிருக்கையில், அந்த அறைக்குள் இருந்து யார் உயிரோடு வெளியே வந்தார். அந்த அறைக்குள் அவர்களுக்குள் நடந்தது என்ன? என்பதை சஸ்பென்ஸோடு சொல்லும் கதையே தாயம்.

8 பேரை கொன்றால்தான் அந்த வேலை கிடைக்குமா? அப்படியென்ன அந்த பதவிக்கு மவுசு இருக்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு கிளைமாக்சில் பதில் சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும், கிளைமாக்சில் 7 பேரை கொன்றுவிட்டு, ஒருவர் வெளியே வருவது போலவும் காட்டியிருக்கிறார்கள்.
ஆங்கில படங்களில் இதுபோன்ற படங்கள் வெளிவந்து வெற்றிபெற்றுள்ளன. அதேநேரத்தில் ரசிக்கவும் வைத்துள்ளனர். அதைபோல் இந்த படத்தையும் எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் கண்ணன் ரங்கசாமி. இதற்காக, எண்டர்டெயின்மெண்டே இல்லாமல் திரில்லிங்காக கொண்டு போயிருந்தாலும், அதை ரசிக்கும்படியாக எடுக்க தவறியிருக்கிறார்.

படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசம் காட்டுவதுபோல், அவர்களுக்கென்று தனித்தனி குணாதிசயங்கள் கொடுத்திருந்தாலும், காட்சிப்படுத்திய விதம் ரசிக்கும்படியாக இல்லை. கடைசியில், அவர்கள் அறைக்குள் அடைக்கப்பட்டது மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைதான் என்று சொல்லி முடித்திருக்கிறார். ஆனால், அதை சுவாரஸ்யமாக கொடுக்க தவறியிருக்கிறார். இதனால், படத்தை பார்க்கும் நமக்கும் சிகிச்சை அளிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
ஒரு அறைக்குள்ளே நடக்கக்கூடிய சம்பவத்தை, ரொம்பவும் நேர்த்தியாக கையாண்டிருக்கவேண்டும். அதை அவர், பொறுப்புடன் கையாளவில்லை என்றே தோன்றுகிறது. படத்தின் கதை சுவாரஸ்யம் இல்லாமல் நகர்வதால், படத்தின் இசையும் பெரிதாக ரசிக்கும்படி இல்லை. மற்றபடி ஒளிப்பதிவு ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் ‘தாயம்’ காயம்.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்