இது ஒருபுறம் இருக்க பேராசிரியர் எக்ஸ்-ம் ஒரு வித மூளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த பாதிப்பின் காரணமாக சுமார் 100-க்கும் மேற்பட்ட எக்ஸ்-மேன்களையும் கொன்று குவித்துள்ளார். பேராசிரியர் எக்ஸின் அறிவுரைப்படியே வோல்வோரின் ஒவ்வொரு வேலையையும் செய்து வருகிறார்.

இந்நிலையில், ட்ரான்ஸ்ஜென்ஸ் என்னும் இடத்தில் இருந்து தப்பி வரும் பெண் ஒருவர், வோல்வோரினை மறைமுகமாக சந்தித்து லாரா என்னும் பெண்ணை பார்த்துக் கொள்ளும்படி கேட்கிறார். மேலும் லாராவை கனடாவில் உள்ள ஒரு இடத்தில் பத்திரமாக கொண்டு சேர்க்கும்படியும் கேட்கிறாள். முதலில் அந்த பெண்ணின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் வோல்வோரின் பணம் பெற்றுக்கொண்டு ஒருவழியாக ஒத்துக் கொள்கிறார்.
அதே நேரத்தில் லாராவை கொல்ல ஒரு கும்பல் தேடி வருகிறது. அந்த நேரத்தில் லாரா தனது மகள் என்னும் உண்மையை அறியும் வோல்வோரின், லாராவை அந்த கும்பலிடமிருந்து எப்படி காப்பாற்றினார்? என்னென்ன இன்னல்களை சந்தித்தார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது படத்தின் ஸ்வாரஸ்யமான மீதிக்கதை.

வோல்வோரின்னாக வரும் ஹீ ஜேக்மேன் அவரது இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். படம் முழுவதும் வயதான தோற்றத்தில் வரும் வோல்வோரின் சண்டைக்காட்சிகளில் எப்போதும் போல அசத்தியுள்ளார். எக்ஸ் மேன் படங்களிலேயே வோல்வோரின் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் படமாக அமைந்ததற்கு ஹீ ஜேக்மேனும் ஒரு முக்கிய காரணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதே போல் பேட்ரிக் ஸ்டீவர்ட்(போராசிரியர் எக்ஸ்), ரிச்சர்ட், பாய்ட், ஸ்டீபன் மெர்சண்ட், டஃப்னே கீன் உள்ளிட்ட அனைவரது நடிப்பும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக சண்டைக்காட்சிகளில் டஃப்னே கீனின் நடிப்பு மிகவும் ஆக்ரோஷமாக உள்ளது படத்திற்கு ப்ளஸ்.

எக்ஸ் மேன் வரிசையில் 17 வருடங்களாக படங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், வோல்வோரினுக்காக 3 பாகங்கள் உருவாகியுள்ளன. அதில் லோகன் படமே 3வது மற்றும் கடைசி பாகமாகும். எக்ஸ் மென் வரிசையிலேயே வோல்வோரின் பாகமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு முன்னதாக கடந்த 2009-ஆம் ஆண்டு எக்ஸ் மேன் வோல்வோரின் என்ற முதல் பாகமும், 2013-ஆம் ஆண்டு தி வோல்வோரின் என்ற இரண்டாவது பாகமும் வெளியான நிலையில், வோல்வோரின் கதையின் கடைசி பாகமாக லோகன் படத்தை இயக்குநர் ஜேம்ஸ் மேன்கோல்டு இயக்கியுள்ளார்.
வோல்வோரின் படத்தின் 2வது பாகத்தையும் இவரே இயக்கியிருந்தார். வோல்வோரின் படத்திலேயே லோகன் பாகமே சிறந்த அதிரடி படமாக உருவாகியுள்ளது படத்தின் சிறப்பு. முழுக்க முழுக்க அதிரடி படமாக உருவாகியுள்ள லோகன், டார்க் நைட் படத்திற்கு பிறகு அதிகமாக பேசப்படும் படமாக உருவாகியுள்ளது. குறிப்பாக படத்தில் வோல்வோரின் வாராவை தனது மகள் என மறுக்கும் காட்சிகளும், லாராவுக்கு ஆபத்து வந்தால் அதில் வோல்வோரினுக்கு ஏற்படும் கோபத்தையும் இயக்குநர் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார்.

படத்தின் சண்டைக்காட்சிகள் மலைப்பாகவும், விரும்பிப் பார்க்கும்படியும் உள்ளது. குறிப்பாக வோல்வோரின், டஃப்னே கீன் சண்டைக்காட்சிகளில் படத்தின் சண்டை இயக்குநர் சிறப்பாக பணியாற்றியுள்ளதை படத்தில் காண முடிகிறது. ஜான் மேத்திசனின் ஒளிப்பதிவும், வி.எஃப்.எக்ஸ். காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளது.
மொத்தத்தில் லோகன் வன்முறை விருந்து.
மேலும் விமர்சனம் செய்திகள்
- காதலிக்கும் மகன்... பிரிக்கும் தந்தை... பாரிஸ் ஜெயராஜ் விமர்சனம்
- 30 வயதுக்குள் திருமணம் செய்ய போராடும் வாலிபர் - நானும் சிங்கிள் தான் விமர்சனம்
- 4 வெவ்வேறு வயதினருடைய காதல் கதை - கேர் ஆப் காதல் - விமர்சனம்
- காதலை கதைக்கருவாக கொண்ட ஆந்தாலஜி படம் - குட்டி ஸ்டோரி விமர்சனம்
- நண்பனா... எதிரியா... சிதம்பரம் ரயில்வே கேட் விமர்சனம்