மனைவி தன்னை பிரிந்த சோகத்தில் குடியே கதியென்று கிடக்கிறார் நாயகன். அப்போதுதான் விபச்சார தொழில் செய்யும் நாயகி சக்தி ஸ்ரீயின் அறிமுகம் நாயகனுக்கு கிடைக்கிறது. ஏற்கெனவே, கணவனை பிரிந்து வேறு வழியில்லாமல் விபச்சாரத்தில் விழுந்த சக்திஸ்ரீக்கு, தாமோதரனின் வலி புரியவே, அவரை அரவணைத்து ஆதரவு கொடுக்கிறாள்.
சக்தி ஸ்ரீயின் அரவணைப்பும், ஆதரவும் தாமோதரனுக்கு நிம்மதியை கொடுக்கவே, குடிப்பழக்கத்தில் இருந்து விலகுகிறார். இதேவேளையில், நாயகனின் நண்பரும் மாடர்ன் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்து வருகிறார். ஆனால், அவருக்கோ கிராமத்து பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்கள்.
தனக்கு மாடர்ன் பெண் கிடைக்காத விரக்தியில், தனக்கு மனைவியாக வந்த கிராமத்து பெண்ணை மாடர்ன் பெண்ணாக மாற்ற முயற்சிக்கிறார் நாயகனின் நண்பர். அந்த முயற்சி அவருக்கு எந்தவிதமான வலிகளை கொடுத்தது. தாமோதரன்-சக்திஸ்ரீயின் உறவு எந்த நிலைமைக்கு சென்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நடித்திருக்கும் நாயகன், நாயகி முதற்கொண்டு அனைவரும் புதுமுகங்கள் என்பதால் யாரிடமும் அவ்வளவாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. அவரவர் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மாடர்ன் பெண்ணை நம்பி வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள் என்ற சமூக அக்கறையோடு இந்த படத்தை எடுத்திருக்கிறார். நாகரீக வாழ்க்கைக்கும், புதுவிதமான வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு செல்லும் இளைஞர்களின் வலியை படத்தில் சொல்ல வந்திருக்கிறார். ஆனால், அதை சரியான காட்சியமைப்பு இல்லாமல் படமாக்கியிருப்பதால் ரசிக்க முடியாமல் போகிறது. சிறு பட்ஜெட் படமென்பதால் நடிகர், நடிகைகள் தேர்விலும் அதிகம் கவனம் செலுத்த தவறியிருக்கிறார்.
குபேரன் இசையில் பாடல்களை ரசிக்க முடியவில்லை. பின்னணி இசையும் இரைச்சல்தான். கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு இன்னும் கொஞ்சம் குளுமை சேர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘பச்சைக்கிளி பரிமளா’ பறக்கவில்லை.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்