இதனால் நாயகிக்கு நாயகனை பார்க்கவேண்டும் என்று துடிக்கிறாள். ஆனால், அவளால் அந்த பங்களாவுக்குள் இருந்து வெளியே செல்ல முடியாத சூழ்நிலை இருக்கிறது. ஒரு ஆத்மா அவளை வெளியே செல்லவிடாமல் அந்த பங்களாவுக்குள்ளேயே சிறை வைத்திருக்கிறது.
ஆனால், பணியாள் அந்த ஆத்மாவிடமிருந்து நாயகியை விடுவிக்க மந்திரிக்கப்பட்ட கண்ணாடி ஒன்றை அவளிடம் கொடுக்கிறான். அதை வைத்துக் கொண்டு அந்த பங்களாவுக்குள் இருந்து வெளியே வரும் நாயகி, சாரட் வண்டியில் காட்டுப் பாதையில் பயணிக்கிறாள்.
அப்போது, யாரோ உதவிகேட்டு சத்தம் வர சாரட் வண்டியை ஓட்டுபவன் கீழிறங்கி என்னவென்று பார்க்க செல்கிறான். அவன் திரும்பிவர நேரமானதும் அவனைத் தேடி நாயகி, சாரட் வண்டியை விட்டு வெளியே வந்து காட்டுக்குள் போகிறாள். அப்போது இவளை சிறைபிடித்திருந்த ஆத்மா, வண்டிக்காரனின் உடம்புக்குள் புகுந்து இவளை தாக்குகிறது. அவள் கையில் இருக்கும் மந்திரிக்கப்பட்ட கண்ணாடியும் அவள் கையை விட்டு போகிறது.
அப்போது அந்த ஆத்மா, நாயகியையும், நாயகனையும் ஒன்று சேரவிடமாட்டேன் என்று கூறுகிறது. அந்த ஆத்மாவை மீறி நாயகனும், நாயகியும் ஒன்று இணைந்தார்களா? இவர்களை சேரவிடாத அந்த ஆத்மா யாருடையது? என்பதே மீதிக்கதை.
படத்தின் நாயகன் அப்டாப் ஷிவ்தசானி பார்க்க அழகாக இருக்கிறார். படம் முழுக்க இவர் சோகமயமாகவே வருகிறார். காதலியை பிரிந்து வாடும் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேநேரத்தில், ஊர், பெயர் தெரியாத ஒரு பெண்ணுக்காக பரிதாபப்படும் காட்சிகளில் எல்லாம் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகி தியா பாஜ்பாய் இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆத்மாவுக்கு பயந்து நடுங்கும் காட்சிகளிலும், ஆத்மா உட்புகுந்தவுடன் அவளுடைய உடம்பில் ஏற்படும் மாற்றங்களையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆத்மா உள்ளே புகுந்ததும் இவர் குரலை உயர்த்தி கதறும் காட்சிகள் எல்லாம் தியேட்டரையே அதிர வைக்கின்றன.
படத்தில் பேசப்படக்கூடிய மற்றொரு கதாபாத்திரம் மந்திரவாதியாக வருபவர்தான். பார்ப்பதற்கு தலைவாசல் விஜய்யை ஞாபகப்படுத்துகிறார். அவரது பேச்சும், வித்தியாசமான நடையும் அனைவரையும் கவர்கிறது. அவரது கதாபாத்திரமும் மிகவும் வலுவாக அமைந்துள்ளது. அதை சரியாக புரிந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகனின் தங்கையாக வருபவரும் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்திலிருந்தே பயம் நம்மை தொற்றிக் கொள்கிறது. போகப்போக ஒவ்வொரு காட்சிகளும் திரிலிங்காவே நகர ஒரு முழுமையான பேய் படம் பார்த்த திருப்தியை கொடுக்கிறது இந்த படம். ஆத்மா உடம்புக்குள் புகும்வரை அமைதியாக இருப்பவள், ஆவி புகுந்தபின் மாறும் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. இதை இயக்குனர் பூசன் படேல் காட்சிப்படுத்திய விதம் அருமை. படத்தின் ஆரம்பத்திற்குள்ளேயே கதைக்குள் கொண்டு செல்லும் இயக்குனர், இடையில் காமெடிக்கு இடம்கொடுக்காமல் செண்டிமெண்ட், திரில்லிங்காகவே படத்தை கொண்டு போயிருப்பது சிறப்பு.
சிரந்தன் பட்டின் இசை படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறது. இவருடைய இசையும் படத்திற்கான திரில்லிங்கை ஏற்றிக் கொடுத்திருக்கிறது. நரேன் கேடியாவின் ஒளிப்பதிவும் படத்தின் வேகத்திற்கு கைகொடுத்திருக்கிறது. காட்சியின் தேவைக்கேற்ற ஒளியை அமைத்து, தனது திறமையை பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘சந்திரமுகி ரிட்டர்ன்ஸ்’ பயத்தை கொடுக்கிறது.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்