இந்நிலையில், தூரத்தில் ஒரு தீவைப் பார்க்கும் இவர்கள், அங்கிருந்து ஏதாவது உதவி கிடைக்காதா? என்ற எண்ணத்தில் ஒரு சில மாணவர்கள் மட்டும் கடலில் குதித்து அந்த தீவை அடைகிறார்கள். அந்த தீவில் யாருமில்லாததால், அங்கு பழுதாகி கிடக்கும் சிறிய படகை சரிசெய்து, அதை எடுத்துக் கொண்டு இவர்கள் வந்த கப்பலை நோக்கி பயணிக்கிறார்கள்.
அப்போது கடலுக்குள் இருந்து இரண்டு தலை கொண்ட சுறா ஒன்று அந்த மாணவர்கள் பயணித்த சிறிய படகை தாக்கி, மாணவர்களை கடித்து கொன்றுவிடுகிறது. இதனால், பயந்துபோன மற்றவர்கள், அந்த சுறாவிடமிருந்து தப்பிக்கும் வழியை யோசிக்கிறார்கள். ஒருகட்டத்தில் அந்த சுறா, சத்தத்தை வைத்துதான் தாக்குதல் நடத்துகிறது என்பதை புரிந்துகொண்டு, அந்த சுறாவை திசை திருப்பி, தாங்கள் வந்த கப்பலை சரிசெய்து தப்பிக்க போராடுகிறார்கள்.
சுறாவின் பிடியில் இருந்து அவர்கள் அனைவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
ஆழ்கடலுக்குள் சுறாவிடம் மாட்டித் தப்பிக்கும் கதைகள் ஹாலிவுட்டில் நிறைய வெளிவந்துவிட்டது. இந்த படத்தை வித்தியாசப்படுத்தி காட்டவேண்டும் என்பதற்காக இரட்டை தலையுடன் சுறா இருப்பதுபோன்று கதையை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் வரும் சுறா பொம்மையை போல் இருப்பது தெரிகிறது. அதற்காக படக்குழுவினர் பெரிதாக இதற்கு மெனக்கெடவில்லை என்று தோன்றுகிறது.
படத்தில் பெரும்பாலான காட்சிகளில் சுறாவின் மேற்புற செதில் மட்டுமே தெரிகிறது. மற்ற இடங்களில் சுறாவின் வாய் மட்டுமே தெரிகிறது. இரட்டை தலையுடன் சுறாவை முழுமையாக பார்க்கவே முடியவில்லை. படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. எப்போது சுறா தாக்கும் என்ற அச்சம் இருந்தாலும், சுறா வந்து தாக்கும் இடங்களில் நமக்கு பயமே இல்லை.
படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஹாலிவுட்டிலேயே மிகவும் குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்திருப்பதால் அதற்கேற்றார்போல்தான் படமும் இருக்கிறது.
மொத்தத்தில் ‘அபாய கடல்’ அச்சமில்லை.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்