9 வருடங்கள் கழிந்த நிலையில், சௌவின் குற்றங்களை ஜாக்கியால் நிரூபிக்க முடியாமலேயே போகிறது. அவரது உயரதிகாரியிடம் சௌ ஒரு குற்றவாளி என பலமுறை எடுத்துச்சொல்லும் ஜாக்கியின் பேச்சை அவர்கள் கேட்பதே இல்லை. இந்நிலையில், சௌ குற்றவாளி என்பதை நிரூபிக்க நினைக்கும் ஜாக்கிக்கு உதவி செய்வதற்காக சௌ நடத்தி வரும் கேசினோ கிளப்பில் வேலைக்கு சேருகிறாள் பிங்பிங்.
அங்கு கேசினோ விளையாட வரும் ஜானியை பார்க்கும் பிங்பிங், அவன் அந்த விளையாட்டில் அதிகம் வெற்றி பெறுவதை கண்டு வியக்கிறாள். அவனுடன் நெருங்கி பழகுகிறாள். அப்போது ஜானியை தேடி ரஷ்யாவில் இருந்து வரும் ஒரு கும்பல், அவன் இருக்கும் கேசினோவுக்குள் புகுந்துவிடுகிறது. அப்போது அங்கிருந்து தப்பிக்க நினைக்கும் ஜானி, தவறுதலாக சௌ இருக்கும் அறைக்குள் சென்றுவிடுகிறான். அப்போது, அங்கு ஒரு பெண் சௌவால் சுடப்பட்டு இறக்கிறாள். இதைப் பார்த்ததும் அங்கிருந்து வெளியேறும் ஜானியை, ரஷ்ய கும்பல் பிடித்து ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்கிறது.
இந்நிலையில், ஜானி, சௌடமிருந்து விலையுயர்ந்த பொருளை திருடிவிட்டதாக அவனிடம் நெருங்கி பழகிய பிங்பிங்கை மிரட்டி, அவனை அழைத்து வரச் சொல்கிறான். பிங்பிங் இதற்கு ஜாக்கிசானின் உதவியை நாடுகிறாள். ஜாக்கிசான் ஜானியை தேடி ரஷ்யாவுக்கு செல்கிறார்.
அங்கு சென்று அவனைத் தேடிக் கண்டுபிடித்து சௌவிடம் ஒப்படைத்து பிங்பிங்கை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
ஜாக்கிசானுக்கு வயதாகிவிட்டதே தவிர, அவரது திறமைக்கும், சுறுசுறுப்புக்கும் இன்னும் வயது ஆகவில்லை. அந்த அளவுக்கு மனிதர் படம் முழுக்க ரொம்பவும் சுறுசுறுப்பாக வருகிறார். இந்த வயதிலும் இந்தளவுக்கு ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கமுடியுமா என்று வியக்க வைத்திருக்கிறார்.
ஜானி நாக்ஸ்வெல்லி படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறார். பிங்பிங்கிற்கு அதிகமான காட்சிகள் இல்லாவிட்டாலும் அவரது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். வில்லன் வின்ஸ்டன் சௌ நம்ம ஊர் ‘கபாலி’ படத்தில் வில்லனாக நடித்தவர். கபாலி படத்தில் வலம்வந்த அமைதியான வில்லனைப்போல் இந்த படத்திலும் அமைதியான வில்லனாக வந்து அசத்தியிருக்கிறார்.
முதல் 20 நிமிடங்கள் படம் நகர்வதே தெரியாமல் விறுவிறுப்பாக செல்கிறது. படத்தின் முடிவு என்னவென்று கணித்துவிடும்படி இருப்பதால், அதை நோக்கி நகரும் காட்சிகள் நீண்டுகொண்டே இருப்பது படத்திற்கு கொஞ்சம் தொய்வை கொடுத்திருக்கிறது. இருப்பினும், அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி ரென்னி ஹார்லின் காட்சிகளை அமைந்திருப்பது சிறப்பு.
மொத்தத்தில் ‘இரண்டு கில்லாடிகள்’ கில்லாடிகள்தான்.
மேலும் விமர்சனம் செய்திகள்
- ரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்
- ஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்
- பணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்
- நடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்
- தந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்