இதனால், ஜேசன் அவர்களை அடித்து துவம்சம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து, தீவில் தஞ்சம் புகுகிறார். அந்த தீவில் ஜெசிகா ஆல்பாவை சந்திக்கும் ஜேசன், அவள் சாம் மூலமாக தன்னை நோட்டமிட வந்தவள் என்பதை தெரிந்து கொள்கிறார். அவளிடம் சென்று விசாரிக்கையில் அவளும் அதை ஒத்துக் கொள்கிறார்.
இருப்பினும், இருவரும் காதல்வயப்பட்டு, நெருக்கமாகிறார்கள். இந்நிலையில், சாம், ஜெசிகா ஆல்பாவை தனது ஆட்களை வைத்து கடத்தி விடுகிறார். தான் சொன்ன மூன்று கொலைகளை ஜேசன் செய்தால் அவளை விட்டுவிடுவதாக கூறுகிறார்.
இறுதியில், ஜேசன், சாம் சொன்ன அந்த மூன்று கொலைகளையும் செய்து தனது காதலியை மீட்டாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
மெக்கானிக் படங்களில் ஒரு கொலையை எப்படி திட்டமிட்டு செய்கிறார்கள் என்பதில்தான் சுவாரஸ்யமே. அந்த சுவாரஸ்யத்தை இந்த படத்திலும் கொடுத்திருக்கிறார்கள். ஜேசன் கொலைகளை செய்ய திட்டம் போடும் காட்சிகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. அதேபோல், வித்தியாசமான ஆயுதங்களை அவர் பயன்படுத்தும் முறைகள் எல்லாம் பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் அனல் தெறிக்கிறது. இவருடைய நடிப்பில் எதுவும் குறை சொல்ல முடியாது என்பதுபோல் இருக்கிறது.
ஜெசிகா ஆல்பா பார்ப்பதற்கு ரொம்பவும் அழகாக இருக்கிறார். இவருக்கும் ஜேசனுக்கும் இடையிலான காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக இல்லை. என்னதான் கதை சிம்பிளாக இருந்தாலும், ஜேசனின் ஆக்ஷன் காட்சிகள் படத்தை ரொம்பவும் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறது. இறுதியில் டாமி லீ ஜோன்ஸ் வரும் காட்சிகளும் சிறப்பாக இருக்கின்றன.
மொத்தத்தில் ‘மெக்கானிக் 2’ அதிரடி.
மேலும் விமர்சனம் செய்திகள்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்
- தன் குடும்பத்தை காக்க போராடும் மோகன்லால் - திரிஷ்யம் 2 விமர்சனம்