இந்த நிலையில், போலீஸ் அதிகாரியாக இருக்கும் நாயகி அருந்ததியுடன் ராம்குமாருக்கு மோதல் ஏற்படுகிறது. பின்னர் ராம்குமார் ஆதரவற்றவர் என்று தெரிந்ததும் அவர் மீது அனுதாபப்படுகிறார் அருந்ததி. இந்த பழக்கம் நாளடைவில் இவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்த, இருவரும் காதலர்களாகிறார்கள்.
இந்த நிலையில், நாசர் ஒருநாள் இறந்து போகிறார். இவர் இயற்கை மரணம் அடைந்துவிட்டதாக நினைத்திருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று அருந்ததி மூலம் தெரிந்துக் கொள்கிறார் ராம்குமார். இதனால், நாசரை கொலை செய்தவர்களை பழிவாங்கத் துடிக்கிறார். ஆனால், அருந்ததியோ கொலை செய்தவர்களை கண்டுபிடித்து சட்டப்படி தண்டிக்க முயற்சிக்கிறார்.
இறுதியில் கொலையாளியை கண்டுபிடித்தது யார்? கொலையாளியை ராம்குமார் பழி வாங்கினாரா? அருந்ததி சட்டப்படி தண்டனை வாங்கித் தந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ராம்குமார், முதல் பாதியில் வெகுளித்தனமான நடிப்பையும், பிற்பாதியில் ஆக்ரோஷமான நடிப்பையும் வெளிப்படுத்தி கலக்கியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அருந்ததி, கவர்ச்சியிலும், போலீஸ் அதிகாரியாகவும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். போலீஸ் அதிகாரிக்குண்டான கம்பீரத்துடன் படம் முழுக்க வருகிறார்.
ஆசிரமம் நடத்துபவராக வரும் நாசர், தன்னுடைய அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். வில்லனாகவும், காமெடியனாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார் மொட்டை ராஜேந்திரன். மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கிரைம் திரில்லர் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுந்தர இளங்கோவன். படத்தை போரடிக்காமல் விறுவிறுப்புடன் கொண்டு சென்றிருக்கிறார். அருந்ததிக்கு ஒரு ஹீரோ அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். சுவாரஸ்யமான காட்சிகள் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
செல்வ கணேஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியை திரில்லர் கதைக்கு ஏற்றாற்போல் இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ரஞ்சன் ராவ் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘அர்த்தநாரி’ ஆக்ரோஷம்.
மேலும் விமர்சனம் செய்திகள்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்
- தன் குடும்பத்தை காக்க போராடும் மோகன்லால் - திரிஷ்யம் 2 விமர்சனம்
- பாசத்திற்காக ஏங்கும் நாயகன் - செம திமிரு விமர்சனம்
- விஷாலின் ஆக்ஷன் விருந்து - சக்ரா விமர்சனம்