செல்லும் வழியில் கார் ரிப்பேர் ஆகிறது. அந்த வழியே வரும் இயக்குனர் ராமநாதன், செளரா சையத்துக்கு தன் காரில் லிப்ட் கொடுத்து கார் ரெடியான உடனே நீ கெளம்பலாம் என்று கூறி தனது காட்டுப் பங்களாவுக்கு அழைத்து செல்கிறார்.
பங்களாவிற்கு சென்றவுடன் ராமநாதனுடன் நட்பாக பழகுகிறார் சௌரா. அப்போது தனது அம்மாவை சினிமாவில் அறிமுகம் செய்தது ராமநாதன்தான் என்றும் தன் அம்மாவை அவர் ஒருதலையாக காதலித்தார் என்பதும் சௌராவிற்கு தெரியவருகிறது. ஆனால் மறுநாள் காலை முதல் ராமநாதன் வேறு மாதிரி நடந்து கொள்ள ஆரம்பிக்கிறார். சௌராவை பிரம்பால் அடிக்கும் அளவுக்கு ஒரு சைக்கோ போல மாறிப் போகிறார்.
இவரிடம் இருந்து தப்பிக்க, அந்த பங்களாவை விட்டே போக நினைக்கிறார். ஆனால் கைவிலங்கு பூட்டி அவரை சிறை வைத்துவிடுகிறார் ராமநாதன்.
இறுதியில் ராமநாதனிடம் இருந்து சௌரா தப்பித்தாரா? ராமநாதன் இவ்வாறு நடந்துக் கொள்ள என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகியாக நடித்திருக்கும் செளரா சையத்துக்கு இது முதல் படம். ஆனால், முதல் படம் என்று தெரியாத அளவிற்கு காட்சிக்கு காட்சி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பதட்டம் இல்லாமல் நடித்திருப்பது சிறப்பு. தமிழ் சினிமாவுக்கு நல்வரவு என்றே சொல்லலாம்.
இந்த படத்தை இயக்கிய ராமநாதன் அவரே இதில் நடிக்கவும் செய்திருக்கிறார். சைக்கோ தனமான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவர் ஏன் சௌராவை அப்படி டார்ச்சர் செய்கிறார் என்பதற்கு விடை தெரியும்போது சபாஷ் போட வைக்கிறது.
ஒரு வீடு, இரண்டு கதாபாத்திரங்களை வைத்து ஒட்டுமொத்த படத்தையும் முடித்திருக்கிறார். படம் ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் போரடித்தாலும், படம் திரில்லருக்கு மாறியபின் என்னதான் நடக்குது பார்க்கலாம் என்று சீட்டில் உட்கார வைக்கிறது. இயக்குனரின் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆனால், கொஞ்சம் சுவாரஸ்யம் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். அதிக வசனங்கள் ஆங்கிலத்தில் இருப்பதை தவிர்த்திருக்கலாம்.
விவேக் நாராயண் இசையும், ராஜேஷின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம். ஒரு சில இடங்களில் வசனங்களே கேட்க முடியாதபடி அதிக சத்தத்தில் பின்னணி இசையை ஓடவிட்டதை தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘வித்தையடி நானுனக்கு’ புதிய முயற்சி.
மேலும் செய்திகள்
- அடுத்தடுத்து மர்ம மரணங்கள்..... விடை தேடி அலையும் பரத் - காளிதாஸ் விமர்சனம்
- தந்தையின் கனவை நிறைவேற்ற துடிக்கும் மகன் - சாம்பியன் விமர்சனம்
- இரண்டு பெண்களிடம் சிக்கி தவிக்கும் ஜெய் - கேப்மாரி விமர்சனம்
- மர்ம கொலைகளை விசாரிக்க செல்லும் போலீஸ் அதிகாரி - இருட்டு விமர்சனம்
- செவன்ஸ் போட்டியில் விளையாடும் கதிர் - ஜடா விமர்சனம்