தீய சக்திகளின் இனத்தில் இருந்து சிறை பிடிக்கப்பட்ட கரோனாவும் இவர்களோடு இணைந்து போருக்கு புறப்படுகிறாள். இறுதியில், இந்த போரில் யார் வென்றார்கள்? தீய சக்திகளிடமிருந்து மனித இனம் காப்பாற்றப்பட்டதா? என்பதை சொல்லும் படமே ‘சக்ரவியுகம்’.
‘வார் கிராப்ட்’ என்று ஹாலிவுட்டில் வெளிவந்த படம் தமிழில் ‘சக்ர வியுகம்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. தீய சக்திகளிடமிருந்து மக்களை காப்பாற்ற போராடும் மனிதர்களின் கதைதான் இது. ஹாலிவுட்டுக்கு அதர பழசான கதைதான் என்றாலும், கதை களத்தையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்த விதத்தில் படம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இப்படம் ‘வேர்ல்டு ஆப் வார் கிராப்ட்’ என்ற வீடியோ கேமை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்களும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
பிரம்மாண்ட ஓநாய்கள், ராட்சத கழுகு, கொடூர பற்களை கொண்ட அரக்கர்கள் என படத்தில் பிரம்மாண்டத்திற்கும் குறைவில்லை. இயக்குனர் டங்கன் ஜோன்ஸ் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்களின் ரசனைக்கேற்றவாறு எடுத்து மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். சைமன் டக்கனின் ஒளிப்பதிவும், ரமின் ஜாவடியின் இசையும் படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘சக்ர வியுகம்’ வெற்றி களம்.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்