மறுமுனையில், ஹாங்காங்கில் மர்மமான முறையில் பலர் கடத்தப்படுகிறார்கள். கடத்தப்பட்டவர்களின் உடல் உறுப்புகள் திருடப்பட்டு அவர்களின் சடலங்கள் கிடைக்கின்றன. இந்த கடத்தல் கும்பலை பிடிக்க, ஜிங் ஊ ரகசிய உளவாளியாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், உடல் உறுப்புகளை கடத்தும் கடத்தல் கும்பல் தலைவனுக்கு இதயத்தில் கோளாறு இருக்கிறது. அவனுக்கு தேவையான இதயம் அவனது தம்பியிடம் இருக்கிறது. தம்பியை கொன்று அதை பெற முயற்சி செய்கிறார். இந்த வேலையை முடிக்க ஜிங் ஊ-க்கு உத்தரவு வருகிறது. இந்த தகவலை போலீசுக்கு தெரிவித்து கடத்தலையும் தடுத்து விடுகிறார். இங்கு ஏற்படும் மோதலில் தலைவனின் தம்பிக்கு அடிப்பட்டு அவர் கோமா நிலைக்கு சென்று விடுகிறார். மேலும் ஜிங் ஊ போலீஸ் அதிகாரி என்று கடத்தல் கும்பலுக்கு தெரிந்து விடுகிறது.
இதனால் தலைவன், ஜிங் ஊவை பிணைக் கைதியாக பிடித்து வைத்து தம்பியின் இதயத்தை கைப்பற்ற நினைக்கிறார். மற்றொரு பக்கம் டோனி ஜா தன்னுடைய பெண் குழந்தைக்கு எலும்பு தானம் கொடுப்பவர் ஜுங் ஊ என்று தெரிந்து கொள்கிறார்.
இறுதியில் ஜிங் ஊ, கடத்தல் கும்பல் தலைவனை பிடித்தாரா? டோனி ஜா தன்னுடைய பெண் குழந்தைக்கு எலும்பு பகுதியை மாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் டோனி ஜாவை விட ஜிங் ஊவை சுற்றியே கதை நகர்கிறது. வழக்கமான டோனி ஜாவை இந்த படத்தில் பார்க்க முடிகிறது. ஜிங் ஊ சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் திறமையாக நடித்திருக்கிறார்கள். படத்தில் இடம் பெற்ற ஆக்ஷன் காட்சிகள் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘நிழல் யுத்தம்’ வெற்றி.
மேலும் விமர்சனம் செய்திகள்
- ரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்
- ஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்
- பணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்
- நடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்
- தந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்