இந்நிலையில், அந்த காட்டில் கடும் வறட்சி ஏற்படுகிறது. வறட்சிக் காலத்தில் இரையைவிட தண்ணீர்தான் முக்கியம். அதனால் யாரும் வேட்டையாடக்கூடாது என்ற சட்டம் அந்த காட்டில் இருக்கிறது. இதனால், தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி எல்லா மிருகங்களும் ஒன்றாக கூடி தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும்போது, அந்த காட்டில் இருக்கும் புலியும் அந்த இடத்தில் தண்ணீர் குடிக்க வருகிறது.
அப்போது, மோக்லியை அது பார்த்துவிடுகிறது. ஓநாய் கூட்டத்திடம் ‘அவன் இங்கிருந்தால் நமக்கெல்லாம் கெட்டது. எனவே, அவனை எனக்கு இரையாக்கி விடுங்கள்’ என்று வாக்குவாதம் செய்கிறது. ஆனால், ஓநாய் கூட்டமோ புலியின் பேச்சைக் கேட்க மறுக்கிறது. புலியும் காட்டில் இருக்கும் சட்டத்தால் அப்போதைக்கு எதுவும் செய்யாமல் விட்டுச் சென்றுவிடுகிறது.
சிலநாட்களில் காட்டில் கடும் மழை பெய்து காடு செழிப்பாக மாறுகிறது. காடு செழிப்பாக மாறியதால் காட்டில் போடப்பட்ட சட்டமும் தளர்ந்துவிடுகிறது. எனவே, எப்படியும் புலி, மோக்லியை வேட்டையாட இங்கு வரும் என பயப்படும் ஓநாய் கூட்டம் மோக்லியை மனிதர்கள் வாழும் பகுதிக்கு அனுப்ப திட்டமிடுகிறது. மனிதர்கள் வாழும் பகுதிக்கு மோக்லியை கருஞ்சிறுத்தை அழைத்துச் செல்கிறது.
போகும் வழியில் புலி இவர்களை வழிமறித்து மோக்லியை வேட்டையாட துடிக்கிறது. ஆனால், கருஞ்சிறுத்தை புலியிடம் சண்டைபோட்டு மோக்லியை தப்பி ஓட வைக்கிறது. தப்பி ஓடும் மோக்லி வேறு இடத்திற்கு வழிமாறி சென்றுவிடுகிறான். இரையை தப்பவிட்ட கோபத்தில் புலி, நேராக ஓநாய் கூட்டத்திடம் சென்று அவர்களை சிறைபிடிக்கிறது. மோக்லி எப்படியும் ஓநாய் கூட்டத்தை தேடி வருவான் என்று நினைத்துக்கொண்டு அந்த ஓநாய் கூட்டத்தை கொடுமைப்படுத்துகிறது.
இறுதியில், மோக்லி மனிதர்கள் வாழும் இடத்தை கண்டுபிடித்து அவர்களோடு சேர்ந்தானா? அல்லது ஓநாய் கூட்டத்தை காப்பாற்ற மீண்டும் காட்டுக்குள் திரும்பி வந்தானா? என்பதை மிகவும் சுவாரஸ்யத்துடன் சொல்லியிருக்கிறார்கள்.
மோக்லியாக வரும் சிறுவன் சிறப்பாக நடித்திருக்கிறான். இந்த வயதில் இந்தளவுக்கு சிறப்பாக நடிக்கமுடியுமா? என்று ஆச்சர்யப்பட வைக்கிறான். படத்தில் மற்றபடி கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் அசர வைக்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எதார்த்தத்தையும் மிஞ்சும் அளவிற்கு கொடுத்து இருக்கிறார்கள். அதேபோல், படத்தில் இடம்பெறும் வசனங்கள் எல்லாம் நெஞ்சில் அழுத்தமாக பதியும் வண்ணம் இருக்கின்றன.
அழகான திரைக்கதையுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜான் ஃபௌரீ. இசையமைப்பாள் ஜான் டெப்னிக்கும் இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
மொத்தத்தில் ‘தி ஜங்கிள் புக்’ அனைவரும் ரசிக்க வேண்டிய படம்.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்