இந்நிலையில் சேதுவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த அவரது அப்பா ஜெயப்பிரகாஷ், விசாகாசிங்கை பெண் பார்க்கிறார்கள். பெண் பார்க்க சென்ற இடத்தில் விசாகாசிங்கிடம் பேசும் சேது, தான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறுகிறார். இதை ஏற்றுக்கொண்ட விசாகாசிங் ‘உங்கள் காதலுக்கு நான் உதவுகிறேன்’ என்று கூறுகிறார்.
திருமண பேச்சை தள்ளிப்போட திட்டமிட்ட இருவரும், ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கு 15 நாட்கள் வேண்டும் என்று பெற்றோர்களிடம் கூறுகிறார்கள். அதன்பிறகு விசாகாசிங்கை நஷ்ரத்திற்கு அறிமுகம் செய்து வைக்கிறார் சேது. மூன்று பேரும் பழகி வரும் நிலையில், விசாகாவிற்கு சேது மீது காதல் வருகிறது. இதை தெரிந்துகொண்ட சேது, நஷ்ரத் தன்னை கண்டுகொள்ளாமல் இருப்பதால், விசாகாவை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
இந்நிலையில், நஷ்ரத்தும் சேதுவை காதலிப்பதாக கூறுகிறார். ஒரே நேரத்தில் இரண்டு பேரும் காதலிப்பதால் யாரை காதலிப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார் சேது. இந்த குழப்பத்தில் இருந்து விடுபட மனோதத்துவ டாக்டரான சந்தானத்தின் உதவியை நாடுகிறார்.
இறுதியில் விசாகா அல்லது நஷ்ரத் இருவரில் யாரை சேது காதலித்தார்? சந்தானம் சேதுவிற்கு எப்படி உதவினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக வந்த சேது இந்த படத்தில் தனி ஹீரோவாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதலால் குழம்பி போகும் காட்சியில் இவருடைய நடிப்பும், இரண்டு பெண்களுக்கு நடுவே சிக்கித் தவிக்கும் நடிப்பும் ரசிக்க வைத்திருக்கிறது.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் நஷ்ரத் மற்றும் விசாகா சிங் இருக்கும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக விசாகா சிங் அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆதரவை பெறுகிறார்.
மனோதத்துவ டாக்டராக வரும் சந்தானம், காமெடியால் ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறார். இவரின் காமெடி பெரிதாக எடுபடவில்லை என்றே சொல்ல வேண்டும். ஜெயப்பிரகாஷ், ஸ்ரீ ரஞ்சனி, தேவதர்ஷினி, பஞ்சு சுப்பு ஆகியோரின் கதாபாத்திரங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை.
காதல் கதையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சாய் கோகுல் ராம்நாத். இந்த மாதிரி கதைகளுடன் ஏற்கனவே பல படங்கள் வந்திருந்தாலும், திரைக்கதையில் சற்று வித்தியாசம் காண்பித்திருப்பது சிறப்பு.
ரதன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். லோகநாதன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘வாலிப ராஜா’ இன்னும் வளரணும்.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்