இந்நிலையில், எதிரிநாட்டு படை சீனாவின் மீது படையெடுத்து வருகிறது. எதிரிகளை எதிர்கொள்ள அரசன் யான் குடும்பத்தின் தலைவருக்கு ஆணையிடுகிறார். அதன்படி, ரிச்சி சென் படை வீரர்களை அழைத்துக் கொண்டு போருக்கு புறப்படுகிறார். போரில் எதிரி படை வீரர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், இவர் தோற்கும் நிலை ஏற்படுகிறது. இவர் மரணம் அடையும் தருவாயில், தனது குடும்பத்துக்கு புறா மூலமாக செய்தி ஒன்றை அனுப்புகிறார்.
அந்த செய்தி, அவரது குடும்பத்தை சென்றடையும் போது, ரிச்சி சென் இறந்துபோகிறார். தனது தந்தையின் சாவுக்கு காரணமான எதிரி நாட்டு படையை எப்படியாவது வீழ்த்தவேண்டும் என ரிச்சிசென்னின் மகன் ஆவேசப்படுகிறார். எதிரிநாட்டு படையினரை தனது குடும்பத்தின் உதவியுடன் வீழ்த்த முடிவெடுத்து வியூகம் வகுக்கிறார்.
ஒரு லட்சம் படை வீரர்கள் கொண்ட எதிரி நாட்டு படை வீரர்களை வெறும் 10 ஆயிரம் வீரர்கள் கொண்ட படையுடன் நேருக்கு நேர் மோதுகிறார். இந்த போரில் அவர் எப்படி வெற்றி பெற்றார்? என்பதே மீதிக்கதை.
படத்தில் ரிச்சி சென் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரைவிட இவருக்கு மகனாக நடித்திருப்பவருக்கு அதிக காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக செய்திருக்கிறார். பெண் வீரர்களாக நடித்திருப்பவர்களின் நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. வாள் சண்டை போடுவது, குதிரையில் சண்டை போடுவது என அனைத்து காட்சிகளிலும் பெண்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
போரில் பெண்கள் ஈடுபடுவதை மையமாக வைத்து படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ப்ராங்கி சான். பிரம்மாண்ட போர் காட்சிகள் நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. ஜாக்கிசான் இப்படத்தை தயாரித்திருக்கிறார். சில சண்டைக்காட்சிகள் ஜாக்கி சான் சண்டைக் காட்சியை நினைவூட்டுகிறது.
படத்தின் பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘அமேசான் போராளிகள்’ மகுடம் சூடுவார்கள்.
மேலும் விமர்சனம் செய்திகள்
- சிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்
- கவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்