பெனிட்டோவுக்கும் அவரது காதலி சனம் ஷெட்டிக்கும் நாளை ஆந்திரா எல்லையில் உள்ள கிராமத்தில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அதே நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்கிறார். எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் ரிப்பேர் ஆகிறது.
இந்நிலையில், ஆந்திர எல்லையோர தமிழக தொகுதி எம்.எல்.ஏ. அருணுக்கு சொந்தமான ராசியான கார் ஒன்று சென்னையில் சர்வீஸ் செய்யப்பட்டு மெக்கானிக் மூலம் நெடுஞ்சாலையில் கொண்டு செல்லப்படுகிறது. அந்த காரில் பெனிட்டோ லிப்ட் கேட்டு ஏறுகிறார். இதே காரில் சைக்கோ கொலைகாரனும் லிப்ட் கேட்டு ஏறுகிறார்.
இவர்கள் மூவரும் நெடுஞ்சாலையில் செல்லும் பயணமே சவாரியின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பெனிட்டோ போலீஸ் அதிகாரிக்கு உண்டான கம்பீரத்துடன் இருக்கிறார். நாளை திருமணத்தை வைத்துக் கொண்டு கொலைகாரனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சனம் ஷெட்டி கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
மெக்கானிக் டிரைவராக வரும் கார்த்திக் யோகி சிறப்பான நடிப்பால் கைத்தட்டல் பெறுகிறார். எம்.ஏல்.ஏ.வாக நடித்திருக்கும் அருண் நடிப்பும் படத்திற்கு பலம்.
எளிய கதையை சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் குகன் சென்னியப்பன். கதாபாத்திரங்களிடம் நன்றாக வேலை வாங்கி இருக்கிறார். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் அதிகமாக ரசித்திருக்கலாம்.
செழியனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். நெடுஞ்சாலை கதை என்பதால் மலைப்பகுதி, காட்டுப்பகுதி என அனைத்தையும் காட்சிகளையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை நன்றாக உள்ளது.
மொத்தத்தில் ‘சவாரி’ சவாலான பயணம்.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்