அப்போது, மோனிஷால் அக்ஷிதாவை திருப்திப்படுத்த முடியாமல் போகிறது. இதனால் நாயகிக்கு வெறுப்பு வரவே, நாயகனை வெறுத்து ஒதுக்குகிறாள். ஆனால், நாயகனோ அவளையே பின் தொடர்ந்து செல்கிறார். இந்நிலையில், ஒருநாள் நாயகியிடம் ஆட்டோ டிரைவர் ஒருவர் தவறாக நடக்க முயற்சிக்க, அவனிடமிருந்து நாயகியை காப்பாற்றுகிறார் மோனிஷ்.
இதனால், மோனிஷ் மீது அக்ஷிதாவுக்கு காதல் வருகிறது. இருவரும் காதலித்து வரும் வேளையில் அக்ஷிதாவுக்கு ‘காமசூத்ரா’ புத்தகம் கிடைக்கிறது. அந்த புத்தகத்தின் மூலம் நாயகனின் பிரச்சினையை தீர்க்கமுடியும் என்று நினைக்கிறாள். கடைசியில், அந்த புத்தகத்தை நாயகனிடம் கொடுத்து, அதன்மூலம் அவனது பிரச்சினையை நாயகி தீர்த்தாரா? இருவரும் சந்தோஷமாக இருந்தார்களா? என்பதே மீதிக்கதை.
கடந்த 2001-ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த 'வாத்ஸாயனா காமசூத்ரா-2' என்ற படமே தற்போது தமிழிலும் டப் செய்யப்பட்டு அதே பெயரில் வெளிவந்திருக்கிறது. இதில், நாயகியாக நடித்திருக்கும் அக்ஷிதா, கவர்ச்சியில் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்து இருக்கிறார். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்.
காமம் என்பது மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று. அதனை முழுவதுமாக அனுபவிக்க முடியாதவர்களுக்கு சரியான தீர்வை நமது முன்னோர்கள் கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள். அதை முறையாக கையாண்டால் இல்லற இன்பத்தில் திருப்தி அடையலாம் என்பதை இப்படத்தின் மூலம் இயக்குனர் சொல்ல வந்திருக்கிறார்.
எளிமையான கதையை படத்தின் நீளத்திற்காக இழுஇழுவென இழுத்திருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் தலைப்பும் போஸ்டரும் ரசிகர்களை ஈர்த்த அளவிற்கு படம் ஈர்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பாபா ஜகிர்தார் இசை ரசிக்கும்படியாக இல்லை.
மொத்தத்தில் ‘காமசூத்ரா-2’ தெளிவு இல்லை.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்