அதன்பிறகு அனுஷ்கா ஆர்யாவை அடிக்கடி சந்திக்க நேருகிறது. இதனால் இருவருக்கும் நட்பு மலர்கிறது. இந்த நட்பு நாளடைவில் அனுஷ்காவிற்கு காதலாக மாறுகிறது. தன் காதலை ஆர்யாவிடம் சொல்ல வரும் நிலையில் ஆர்யா மற்றொரு பெண்ணை காதலிப்பது தெரிந்து அதிர்ச்சியாகிறார்.
குண்டாக இருப்பதால்தான் ஏதும் கைகூட வில்லை என்று வருந்தும் அனுஷ்கா, பிரகாஷ் ராஜ் நடத்தும் சைஸ் ஜீரோ மூலம் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்குகிறார். ஆனால் சைஸ் ஜீரோ மூலம் அனுஷ்காவின் தோழியின் உடல் பாதிக்கப்படுகிறது. இதனால், பிரகாஷ் ராஜூக்கு எதிராக போராடுகிறார். இந்த போராட்டத்திற்கு ஆர்யாவும் உதவுகிறார். நாளடைவில் ஆர்யாவிற்கு அனுஷ்கா மீது காதல் வருகிறது.
இந்நிலையில், வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் அனுஷ்காவை திருமணம் செய்ய முயற்சி செய்கிறார். இறுதியில் ஆர்யா, அனுஷ்கா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? பிரகாஷ் ராஜூடனான போராட்டத்தில் யார் வென்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆர்யாவிற்கு, அதிக வேலை இல்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் கெஸ்ட் ரோல் போல் வந்து சென்றிருக்கிறார்.
இப்படத்திற்காக உடல் எடையை ஏற்றி, குறைத்து மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார் அனுஷ்கா. குண்டான பெண்களின் உணர்வுகளை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் தெளிவான திரைக்கதை இல்லாததால் இப்படம் அஷ்காவின் உழைப்புக்கு ஏற்ற படம் இல்லை என்று எண்ணத்தோன்றுகிறது.
உடல் குறைப்பு என்ற விஷயத்தை மையமாக வைத்து வழக்கமான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் பிரகாஷ் கோவெலமுடி. சிறந்த கதாபாத்திரங்களை வைத்து சிறந்த பொழுது போக்கு படமாக இயக்க தவறவிட்டிருக்கிறார். சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாதது படத்தின் பின்னடைவு. தமிழில் படம் பார்த்தாலும் பல இடங்களில் டப்பிங் படம் பார்ப்பது போல்தான் உள்ளது. முதல் பாதி நன்றாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி பொறுமையை சோதித்து பார்க்கிறது. தெலுங்கின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. படத்தின் தலைப்பு கவர்ந்தளவிற்கு படம் கவரவில்லை.
கீரவாணியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். நீரவ் ஷா தன் ஒளிப்பதிவால் அனுஷ்காவை அழகாக காண்பித்திருக்கிறார். இவருடைய ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘இஞ்சி இடுப்பழகி’ சுமாரான அழகி.
மேலும் விமர்சனம் செய்திகள்
- சிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்
- கவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்