இதனால் மனவேதனையடையும் தங்கை தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். இவரை ஸ்ரீபாலாஜி காப்பாற்றுகிறார். அத்துடன் தன் தங்கையின் தோழியுடன் சேர்ந்து சோனியை பகடைக்காயாக வைத்து அவருடைய அண்ணனை வெளிநாட்டில் இருந்து வரவழைக்க முயற்சி செய்கிறார்கள். இதற்காக சோனியை காதலிக்க வைக்கிறார் ஸ்ரீபாலாஜி.
இறுதியில் ஸ்ரீபாலாஜி சோனியின் அண்ணனை வெளிநாட்டில் இருந்து வரவழைத்து பழிவாங்கினாரா? சோனியுடனான காதல் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கு ஸ்ரீபாலாஜி சிறப்பாக நடித்திருக்கிறார். தங்கைக்காக பழி வாங்கும் கதாபாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சோனி துறுதுறு பெண்ணாக நடித்து மனதில் பதிகிறார். மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிருஷ்ணா, ரிஷிகா, நெல்லை சிவா, மனோகர் ஆகியோரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
வழக்கமான பழிவாங்கும் கதையாக இருந்தாலும், வித்தியாசமான திரைக்கதை மூலம் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சகா. ஆனால், தேவையற்ற காட்சிகள், லாஜிக் மீறல்கள் படத்திற்கு பலவீனம்.
மணிசர்மா இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை பரவாயில்லை. ராஜுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘இஞ்சி முறப்பா’ காட்டம் குறைவு.
மேலும் விமர்சனம் செய்திகள்
- சிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்
- கவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்