
இதில் சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன்சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா,ரோகினி, ஸ்டண்ட் சிவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குனர் கவுதம் வாசுதேவ்மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இசை - அச்சு, எடிட்டிங் - தீபக், ஸ்டண்ட் - சுப்ரீம் சுந்தர், கலை - ஜனார்த்தனன், பாடல்கள் - மதன்கார்க்கி, மணி அமுதவன், தயாரிப்பு - பரத்சீனி. ஒளிப்பதிவு, இயக்கம் - எஸ்.டி.விஜய் மில்டன்.

படம் பற்றி கூறிய இயக்குனர்....
“ இந்த படத்தில் சமுத்திரகனி, கிஷோர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அடையாளத்துக்கும், அங்கீகாரத்துக்கும் போராடுவதை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இந்த கதையில் புதுமுகங்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
கவுதம்வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்த கதையை நான் எழுதும் போதே அவரை மனதில் வைத்து ஒரு பாத்திரத்தை உருவாக்கினேன். இது ஒரு கவுரவ பாத்திரமாக இருந்தாலும் கதையை முன்நோக்கி கொண்டு செல்லும் பாத்திரம். அவர் நடிக்க ஒப்புக் கொண்டது பெரும் மகிழ்ச்சி. நான் நினைத்ததைவிட ‘கோலி சோடா-2’ சிறப்பாக உருவாகி வருகிறது” என்றார்.