டார்லிங், சார்லி சாப்ளின் படங்களில் நடித்த நிக்கி கல்ராணியை ஈரம் படம் அறிமுகமான நடிகர் ஆதி திருமணம் செய்ய இருக்கிறார்.
ஆதி - நிக்கி கல்ராணி
டார்லிங், சார்லி சாப்ளின் படங்களில் நடித்த நிக்கி கல்ராணியை ஈரம் படம் அறிமுகமான நடிகர் ஆதி திருமணம் செய்ய இருக்கிறார்.
தமிழில் டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் யாகவா ராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயபட்டதாக கூறப்பட்டது. இதனை அவர்கள் மறுக்கவில்லை.
ஆதி வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சிகளில் நிக்கி கல்ராணி பங்கேற்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி நெருக்கத்தை உறுதிப்படுத்தியது. மிருகம் படத்தில் ஆதி அறிமுகமாகி ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம், யு டர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
நிக்கி கல்ராணிக்கும், ஆதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக நிக்கி கல்ராணி கூறியிருக்கிறார். மேலும் அதன் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
The best thing to hold onto in life is each other.
We found each other a couple of years ago & it’s official now💍
24.3.22 was really special to us.
We got engaged in the presence of both our families🌸
Seeking all you love & blessings as we take on this new journey together🙏🏻♥️ pic.twitter.com/hrMbxieCAn
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.