இயக்குனரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா, இயக்கியுள்ள மியூசிக் சிங்கிளை சூப்பர் ஸ்டார்கள் வெளியிட்டுள்ளனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இயக்குனரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா, இயக்கியுள்ள மியூசிக் சிங்கிளை சூப்பர் ஸ்டார்கள் வெளியிட்டுள்ளனர்.
சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா இவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர். பலர் இவர்களுக்கு ஆறுதலும் மனதைரியமும் அளித்து வந்தனர். இந்த பிரிவு அவருடைய ரசிகர்களையும் திரைதுறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இயக்குனர் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தையும், கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். சினிமா சண்டைக் கலைஞர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் அவர் எடுத்துள்ளார்.
ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் உறவு முறிந்த பிறகு, ஐஸ்வர்யா தனது இயக்குனர் வேலையில் ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. அதன்படி ஐஸ்வர்யா தனது மியூஸிக் ஆல்பம் வீடியோ வேலைகளை ஆரம்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் ஹைதராபாத்தில் அவர் தொடங்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் இப்பாடல் உருவாகியுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி என பல கலைஞர்கள் பாடியுள்ளனர்.
ரஜினிகாந்த் - மோகன்லால் - அல்லு அர்ஜுன்
இந்நிலையில், ஐஸ்வர்யா இயக்கிவுள்ள மியூசிக் சிங்கிளை மூன்று மொழி சூப்பர்ஸ்டார்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி தமிழில் பயணி சிங்கிளை ரஜினிகாந்தும், மலையாளத்தில் யாத்ராக்காரன் சிங்கிளை மோகன்லாலும், தெலுங்கில் சன்சாரி சிங்கிளை அல்லு அர்ஜுனும் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Happy to release #Payani , music single directed by my daughter Aishwarya , who is back to direction after a long gap of 9 years. I Wish you the very best always @ash_r_dhanush .. god bless .. love you .. https://t.co/x7jUP4upId
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.