திரைப்பட நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துவரும் ‘ஹே சினாமிகா’ படத்தை பிரபல நடிகர் ரன்பீர் கபூர் பாராட்டியுள்ளார்.
துல்கர் சல்மான்
திரைப்பட நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துவரும் ‘ஹே சினாமிகா’ படத்தை பிரபல நடிகர் ரன்பீர் கபூர் பாராட்டியுள்ளார்.
திரைப்பட நடன இயக்குனராக வலம் வந்து தற்போது இயக்குனராக களம் இறங்கியிருப்பவர் பிருந்தா மாஸ்டர். இவர் துல்கர் சல்மான், அதிதி, காஜல் அகர்வாலை வைத்து ’ஹே சினாமிகா’ என்ற படத்தை இயக்கிவருகிறார். கதை மற்றும் பாடலை மதன் கார்க்கி எழுத கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தை முதல் முறையாக தமிழில் ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ரன்பீர் கபூர்
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தை தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தொடர்சியாக இப்படத்தின் அறிவிப்புகள் வெளியானது. இந்த திரைப்படம் மார்ச் மாதம் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அச்சமில்லை அச்சமில்லை பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு ’ஹே சினாமிகா’ படத்திலிருந்து ’மேகம்” என்ற பாடலை நடிகர் சிம்பு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பாலிவுட் பிரபலம் ரன்பீர் கபூர், ஹே சினாமிகா படம் தொடர்பாக நடிகர் துல்கர் சல்மான், பிருந்தா உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Thank you so much #Ranbir for your kind words and warmth to all of us on #HeySinamika. Always been the biggest fan. Our new single video #Megham /#Alalegase arriving today @ 6pm
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.