
காதலர் தினமான பிப்ரவரி 14-ந்தேதியில் அந்த ஆல்பத்தை வெளியிட இருந்த நிலையில், கடந்த வாரம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை மருத்துவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் படப்பிடிப்பு ஸ்தம்பித்தது. 14-ந்தேதி ஆல்பம் வெளியாவது சந்தேகமானது. தற்போது அவர் பூரண குணமடைந்து ஐதராபாத்தில் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு திரும்பினார்.
நாளை அவர் மீண்டும் காதல் ஆல்பம் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார். இதனால் 14-ந் தேதி ஐஸ்வர்யா இயக்கும் காதல் ஆல்பம் வெளியாவது உறுதியாகி உள்ளது.