மோகன்லால், மம்முட்டி, அமலா பால், துல்கர், திரிஷாவை தொடர்ந்து காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
காஜல் அகர்வால்
மோகன்லால், மம்முட்டி, அமலா பால், துல்கர், திரிஷாவை தொடர்ந்து காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும்.
காஜல் அகர்வால்
ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிருத்விராஜ், துல்கர் சல்மான், திரிஷா, அமலா பால் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு, தற்போது பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது. இத்தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கோல்டன் விசா வழங்கிய அமீரக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இவர் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy to have received UAE’s Golden visa. This country has always been such huge encouragement for artists like us. Grateful and looking forward to future collaborations in the UAE.
Big thank you to Mr Muhammed Shanid of Juma Almheiri, Suresh Punnasseril and Naressh Krishna pic.twitter.com/XDuuO4boPG
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.