நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் அடுத்தாக நடிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `நேர்கொண்ட பார்வை'. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் இப்படம் ஆகஸ்ட் 8-ம்தேதி வெளியாக உள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைந்து புதிய படத்தை உருவாக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். தற்போது AK 60 என்று தற்காலிமாக பெயர் வைத்துள்ளார்கள்.
ஆக்ஷன், திரில்லர், அட்வெஞ்சர் ஆகியவை கலந்து உருவாகும் என்றும், பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்க படவுள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.