கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ஆகஸ்ட் 10-ல் ரிலீசாகவிருக்கும் நிலையில், படத்தின் இரண்டாவது டிரைலர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Vishwaroopam2 #KamalHaasan
கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக `விஸ்வரூபம்-2' ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் வெளியாகிய ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலருக்கு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் இரண்டாவது டிரைலர் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது ஔிபரப்பப்படுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
முன்னதாக நேற்று படத்தில் இருந்து `சாதி மதம்' என்ற மூன்றாவது சிங்கிள் நேற்று வெளியானது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல் ஹாசனுடன், ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Vishwaroopam2 #KamalHaasan