ராணுவ அதிகாரியான பேட்டிஸ்டா தனது சகோதரர் வீட்டிற்கு வருகிறார். அங்கு தவறான வழிக்கு சென்று தனது அம்மாவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் தனது சசோகதரரின் மகளான லாரா பீக்கை வெளியே அழைத்துச் செல்கிறார். இருவரும் கால்பந்தாட்ட போட்டியை காணச் செல்கின்றனர்.
மைதானத்தில் லாரா பீக் தனது நண்பர் ஒருவரை பார்க்க சென்றுவிடுகிறார். லாராவை காணாமல் தேடும் பேட்டிஸ்டா, அந்த மைதானத்தை ஒரு மர்மகும்பல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதை தெரிந்து கொண்டு, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் அவர்களை தடுக்கவும், போலீசுக்கு தகவல் தெரிவிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.
கடைசியில் லாரா பீக்கை, பேட்டிஸ்டா கண்டுபிடித்தாரா? மைதானத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த மர்ம கும்பலின் நோக்கம் என்ன? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆக்ஷன் மற்றும் காமெடி கதாபாத்திரத்தில் பார்த்த பேட்டிஸ்டாவை ஆக்ஷன் கலந்த செண்டிமென்ட் கதாபாத்திரத்தில் பார்க்க முடிகிறது. பியர்ஸ் பிராஸ்னன், லாரா பீக், ரே ஸ்டூவன்சன், அலெக்சாண்ட்ரா தினு, மார்டின் போர்டு, அமித் ஷா, லக்கி கேஸ்கல் என அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களது பணியை சிறப்பாக செய்துள்ளார்கள்.
வழக்கமான ஒரு கதையை வித்தியாசமான கோணத்தில் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதையாக இயக்கியிருக்கிறார் ஸ்காட் மேன். ராபர்ட் ஹாலின் படத்தொகுப்பு படத்துக்கு முக்கிய பலம்.
ஜேம்ஸ் எட்வர்டு பார்கர், டிம் டெஸ்பிக்கின் பின்னணி இசையும், எமில் டோபுசோவின் ஒளிப்பதிவும் சிறப்பு.
மொத்தத்தில் `ஃபைனல் ஸ்கோர்' விறுவிறுப்பு. #FinalScoreReview #DaveBautista