பிரிட்டீஷ் அதிகாரியான ஜேவியர் பார்டம் தனது படைகளுடன் கடற்கொள்ளையர்கள் இருக்கும் இடங்களை குறிவைத்து தகர்த்து வருகிறார். பார்டம் கால் பதித்த இடங்களில், கடற்கொள்கையர்கள் அனைவரும் அழிக்கப்படுகின்றனர். இவ்வாறாக நாயகன் ஜாக் ஸ்பாரோ என்னும் ஜானி டெப், அவரது தந்தையுடன் கடலில் சென்று கொண்டிருக்கும் போது பார்டம் படை நடத்தும் தாக்குதலில் ஜானி டெப் தந்தை உயிரிழக்கிறார். இவ்வாறு அவர் உயிரிழக்கும் தருணத்தில் ஜானி டெப்பிடம் திசை பார்க்கும் காம்பஸ் கருவி ஒன்றை கொடுத்து, இது உனக்கு உதவும் என்று கூறி இறந்துவிடுகிறார்.
தனது தந்தையை இழந்த பின்னர், அங்கிருந்து தப்பித்து செல்லும் ஜானி டெப், நேராக திரிகோணத் தீவுக்கு செல்கிறார். திரிகோணத் தீவுக்கு சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்ப முடியாது என்பது வரலாறு. எனினும் தனது கப்பலை திரிகோணத் தீவுக்கு ஜானி டெப் திருப்புகிறார். பார்டம் அவரை பின்தொடர்ந்து செல்ல, திரிகோணத் தீவை நெருங்கும் நேரத்தில் ஜானி டெப் தனத கப்பலை திருப்பி விடுகிறார்.
ஆனால் பார்டம் சென்ற கப்பல் திரிகோணத் தீவுக்குள் சென்று அங்கேயே சிக்கிக் கொள்கிறது. இதையடுத்து அந்த தீவுக்குள் செல்லும் பார்டமின் கப்பல் பாறைகளில் மோதி எரிந்த விடுகிறது. அந்த கப்பலில் பயணித்த பார்டம் உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் எரிந்து அறுவறுப்பான தோற்றத்துடன் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஜானி டெப்பை பழிவாங்க சரியான சமயத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுஒருபுறம் இருக்க தனது தந்தையான ஒர்லாண்டோ ப்ளூமை கண்டுபிடிக்க அவரது மகன் ப்ரென்டன் வெயிட்ஸ் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஒரு கட்டத்தில் திரிகோணத் தீவில் இருக்கும் திரிசூலத்தை எடுத்தால் தான் நினைத்ததை செய்யலாம் என்பதை அறியும் வெயிட்ஸ் அதனை தேடி செல்கிறார். அதற்காக ஜானி டெப் தான் தனக்கு உதவ முடியும் என்று அவரது உதவியை நாடுகிறான்.
அதேநேரத்தில், தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற எண்ணி, அதே திரிசூலத்தை கண்டுபிடிக்க கயா ஸ்கோடல்ரியோவும் ஜானி டெப்பின் உதவியை கேட்க மூன்று பேரும் இணைந்து திரிசூலத்தை கண்டுபிடிக்க செல்கின்றனர்.
இந்நிலையில், ஜானிடெப்பை பழிவாங்க, அவரால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றுகூடி வருகின்றனர். இந்நிலையில், ஜானி டெப், அந்த திரிசூலத்தை மீட்டு அவர்கள் அனைவரையும் பழிவாங்கினாரா? ப்ரென்டன் வெயிட்ஸ் தனது தந்தையை கண்டுபிடித்தானா? கயா ஸ்கோடல்ரியோ அவளது தந்தையின் ஆசையை நிறைவேற்றினாளா? என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
வழக்கம்போல் ஜானி டெப் தனக்கே உரிய காமெடி கலந்த பேச்சுடன் ரசிக்க வைக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் அவரது பாணியிலேயே கலக்கியிருக்கிறார். ஜேவியர் பார்டம் ஒரு வில்லனுக்கு உரிய கெத்தான தோற்றத்துடனும், பேச்சுடனும் வலம் வந்திருக்கிறார். ஜானி டெப்பை அழிக்க கங்கனம் கட்டிக் கொண்டு திரியும் அவரது அறுவறுப்பான தோற்றத்துடனான நடிப்பு ரசிக்க வைக்கிறது.
தனது தந்தையை தேடி செல்லும் ப்ரென்டன் வெயிட்ஸ், தந்தை மீதான பாசத்தில் நெருட வைக்கிறார். தடைகள் பல வந்தாலும், அதனை சுக்குநூறாக்கி ஜானி டெப்புடனேயே பயணிக்கிறார். கயா ஸ்கோடல்ரியோ தனக்குரிய கதாபாத்திரத்திற்கு தேவையான பங்களிப்பை அழகாக கொடுத்திருக்கிறார். மற்றபடி கெவின் மிக்நல்லி, ஜியோப்ர ரஷ் என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
ஜோசிம் ரோனிங், எஸ்பென் சான்ட்பெர்க் இயக்கத்தில் படம் ரசிக்கும்படி இருக்கிறது. முழுக்க முழுக்க கடலிலேயே எடுக்கப்பட்டிருப்பது போல காட்டப்படும் காட்சிகள் அனைத்தும் தத்ரூபமாக இருக்கிறது. திரிகோணத் தீவிலே கப்பல் மாட்டிக் கொள்ளும் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது.
பால் கேமரூனின் ஒளிப்பதிவில் காட்சிகள் தத்ரூபமாக வந்திருக்கிறது. அலைகளினூடே எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. கோஃப் ஜானெலியின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் `பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்: சல்ஸரின் வஞ்சம்' தோற்றுப்போனது.