மேற்கு முகப்பேரில் அமைந்துள்ள கனதுர்கா அம்மன் கோவிலின் பூசாரியாக இருந்து வருகிறார் டெல்லி கணேஷ். இவருடைய மகள் நாயகி திவ்யா நாகேஷ். டெல்லி கணேஷ் தனது தங்கையின் மகனான நாயகன் சரவணனுக்கு, திவ்யா நாகேஷை திருமணம் செய்துகொடுப்பதாக சிறு வயதிலிருந்தே முடிவு செய்து வைத்திருக்கிறார்.
திருமண வயதை நெருங்கியதும், இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அப்போது சரவணனின் ஜாதகத்தை பார்க்கிறார்கள். அதில், சரவணனுக்கு ஜாதகத்தில் பெரிய கண்டம் இருப்பதாக சொல்கிறார்கள். இதனால், டெல்லிகணேஷின் தங்கை திவ்யா நாகேஷுக்கு தனது மகனை திருமணம் செய்துகொடுக்க தயங்குகிறார்.
ஆனால், இதில் உடன்பாடு இல்லாத டெல்லிகணேஷ் கனகதுர்கா கோவிலில் இருக்கும் சாமியாரிடம் சென்று கேட்கிறார். அவரோ, இருவருக்கும் திருமணம் செய்யலாம் என்றும், திருமணத்திற்கு பிறகு ஒன்று சேராமல் விரதம் இருந்து ஒரு பூஜை செய்யவேண்டும் என்றும் அதன்பிறகு, சரவணனுக்கு ஏற்பட்ட கண்டம் தீர்ந்துவிடும் என்றும் கூறுகிறார். இதனால், இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
இதற்கிடையில், கனகதுர்கா கோவிலில் சிறுவயதிலிருந்தே சேவை செய்துவரும் மற்றொரு நாயகியான ஜான்விகாவுக்கு டெல்லிகணேஷ் ஏற்பாட்டில் திருமணம் நடைபெறுகிறது. ஜான்விகாவை திருமணம் செய்தவருக்கு ஒரு பிரச்சினை வருகிறது. அவரை ஒருதலையாக காதலித்தவள் விபத்தில் அடிபட்டு இறக்க, ஆவியாக வந்து இவர்களுடைய வாழ்க்கையில் இடைஞ்சல் கொடுக்கிறாள். அதிலிருந்து விடுபட இவர்களும் கனகதுர்காவை வேண்டுகிறார்கள்.
இந்த மாதிரி இரண்டு ஜோடிகளும் ஒவ்வொரு பிரச்சினையில் சிக்கிக்கொள்ள, இதிலிருந்து இவர்களை கனகதுர்கா எப்படி காப்பாற்றினாள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நடித்திருக்கும் சரவணன், திவ்யா நாகேஷ், ஜான்விகா மற்றும் அவரை திருமணம் செய்துகொள்பவர்கள் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக திவ்யா நாகேஷும், ஜான்விகாவும் கனகதுர்காவிடம் மனமுறுகி வேண்டும் காட்சிகள் எல்லாம் நெஞ்சை நெகிழ வைக்கிறது. எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக்கூடிய டெல்லி கணேஷ், பூசாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவரது நடிப்பும் பலே சொல்ல வைக்கிறது.
டி.பி.கஜேந்திரன் சில காட்சிகளே வந்தாலும் நடிப்பில் மிளிர்கிறார். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் அழகாக இருக்கிறது. இதுவரை யாரும் சொல்லாத கனகதுர்காவின் மகிமையை இப்படத்தில் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் சந்திர கண்ணையன். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பக்தி படம் தமிழ் சினிமாவில் வெளிவந்திருக்கிறது. படத்தில் ஆங்காங்கே பக்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் வந்தாலும், பெரும்பாலும், காதல் மற்றும் கணவன்-மனைவிக்குள் இருக்கும் உறவுகளையே இயக்குனர் மையப்படுத்தி எடுத்திருக்கிறார்.
இருப்பினும், நீண்ட இடைவெளிக்கு எந்தவொரு காட்சியிலும் ஆபாசம் இல்லாத ஒரு படத்தை பார்த்த திருப்தி இருக்கிறது. இந்த காலகட்டத்தில் உள்ளவர்களுக்கு இப்படியொரு படம் பிடிக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இருந்தாலும் இயக்குனரின் முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கலாம்.
தேவனேசன் சொக்கலிங்கம் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி கதைக்கு ஏற்றார்போல் அமைந்திருப்பது சிறப்பு. உதயசங்கரின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான்.
மொத்தத்தில் ‘மேற்கு முகப்பேர் கனகதுர்கா’ பக்தி மணம்.