நாயகன் செந்தில் ஜெகதீசன் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது அம்மாவுக்கு தனது மகன் சொந்த வீடு கட்டி, திருமணம் செய்துவைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசை. ஆனால், அந்த ஆசை நிறைவேறாமலேயே அவர் இறந்துபோகிறார். தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற நினைக்கும் நாயகன், முதலில் சொந்த வீடு கட்டுகிறார். பின்னர், தனது நண்பன் மூலமாக அறிமுகமாகும் நாயகி காயத்ரி ஐயரை திருமணம் செய்து கொள்கிறார்.
இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறக்கிறது. இவர்களது வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அந்த ஏரியா எம்.எல்.ஏ.வின் மகனுக்கும், நாயகிக்கும் ஒரு சிறிய பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் எம்.எல்.ஏ. மகனின் தாய் மாமன் தலையிட அவரையும் அவமானப்படுத்துகிறாள் நாயகி. இதனால், கோபமடைந்த இருவரும் அவளை தீர்த்துக்கட்ட நினைக்கிறார்கள்.
அதன்படி, நாயகன் இல்லாத சமயம் பார்த்து நாயகியையும், அவளது குழந்தையையும் கொலை செய்துவிடுகிறார்கள். பின்னர், தங்களது அரசியல் பின்புலத்தை வைத்து நாயகன்தான் அந்த கொலையை செய்தார் சட்டரீதியாக நிரூபித்து அவரை ஜெயிலுக்குள் தள்ளுகிறார்கள்.
இந்நிலையில், நிரபாரதியான நாயகன் ஜெயிலுக்குள் இருந்து வெளிவந்து தன்னுடைய குடும்பத்தை சீரழித்தவர்களை பழிவாங்குவதே மீதிக்கதை.
நாயகன் செந்தில் ஜெகதீசன் புதுமுகம் என்றாலும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இரண்டாம் பாதியில் எதிரிகளை பழிவாங்கும் காட்சிகளில் எல்லாம் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி காயத்ரி ஐயருக்கு பொறுப்பான கதாபாத்திரம். எம்.எல்.ஏ. மகனிடம் எதிர் வாக்குவாதம் செய்யும் காட்சிகளில் எல்லாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மற்றபடி, படத்தில் நடித்திருப்பவர்கள் முக்கால் வாசி புதுமுகங்கள் என்பதால், அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ, அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பவருடைய நடிப்பு அபாரம்.
இயக்குனர் கிருஷ்ணதாசன் ஒரு திரில்லங்கான கதையை உருவாக்கி இயக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு அதரபழசான பழிவாங்கும் கதைதான் என்றாலும், பழிவாங்கும் காட்சிகள் எல்லாம் புதுமையாக இருப்பது படத்திற்கு சிறப்பு. திரில்லங்கான காட்சிகள் எல்லாம் கண்டிப்பாக திரில்லரை கொடுக்கிறது. ஆனால், சிறப்பான கதாபாத்திரங்கள் தேர்வு இல்லாதது படத்திற்கு பெரிய தொய்வை கொடுத்திருக்கிறது.
சதா சுதர்சனத்தின் இசை இரைச்சலாக இருக்கிறது. திரைக்கதையின் விறுவிறுப்புக்கு இவரது இசை தடை போடுகிறது. அசிஷ் தவார் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான்.
மொத்தத்தில் ‘ஒறுத்தல்’ ஒருமுறை பார்க்கலாம்.