குற்றாலத்தில் டூரிஸ்ட் கைடாக வேலை பார்த்து வருகிறார் நாயகன் சாகர். இவருடைய மாமன் மகளான நாயகி கீர்த்தி கிருஷ்ணா இவர் மீது உயிராக இருக்கிறாள். திருமணம் செய்தால் இவரைத்தான் திருமணம் செய்வேன் என்ற உறுதியுடன் இருக்கிறாள். இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து ஆராய்ச்சி செய்ய வருபவரின் மனைவி, நாயகன் மீது ஆசை கொள்கிறாள்.
நாயகனும் அவளிடம் மயங்கி, அவளே கதியென்று கிடக்கிறான். மறுமுனையில், நாயகனை நினைத்து உருகிப் போய் கிடக்கிறாள் நாயகி கீர்த்தி, ஒருகட்டத்தில் ஆராய்ச்சியாளரின் மனைவி நாயகனிடம் வெறுப்புடன் நடந்து கொள்ள ஆரம்பிக்கிறாள்.
இதன்பிறகு, நாயகன் நிலைப்பாடு என்ன? மாமன் மகளோடு சேர்ந்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நாயகன் சாகர் டூரிஸ்ட் கைடாக இருப்பதால் இவருடைய உடை ரொம்பவும் ஆடம்பரமாக இருக்கிறது. புதுமுகம் என்பதால் இவருடைய நடிப்பில் பெரிதாக எதிர்பார்க்க முடியவில்லை. அதேபோல், நாயகி கீர்த்தி கிருஷ்ணா பார்க்க ரொம்பவும் அழகாக இருக்கிறார். பாவடை தாவணியில் கிராமத்துப் பெண் கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார் என்றாலும் நடிப்பில் இன்னும் கொஞ்சம் தேற வேண்டும்.
ஆராய்ச்சியாளர் என்றாலே பிரெஞ்சு தாடி, கோட் சூட் என வழக்கமான பாணியையே இந்த படத்திலும் கடைப்பிடித்திருப்பது சினிமாத்தனத்தை காட்டுகிறது. ஆராய்ச்சியாளரின் மனைவியாக வரும் ஸ்ரேயா ஜோஸ் மாடர்ன் உடையில் கலக்கியிருக்கிறார். நடிப்பில் பெரிதாக ஒன்றும் இல்லை.
மற்றபடி, படத்தில் எந்தவொரு கதாபாத்திரங்களும் சொல்லும்படியாக எதுவும் செய்யவில்லை என்பதுதான் படத்தின் பெரிய குறை. இயக்குனர் ஸ்டான்லி ஜோஷ் கிராமத்து பின்னணியில் ஒரு மாறுபட்ட காதல் கதையை சொல்ல வந்திருக்கிறார். ஆனால், எந்தவொரு காட்சியையும் ரசிக்கும்படியாக எடுக்காதது படத்திற்கு பெரிய பலவீனமாக அமைந்துள்ளது. அதேபோல், கதாபாத்திரங்கள் தேர்வும் சரியில்லை.
ரஞ்சித் ரவியின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு வலு சேர்க்கவில்லை. சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் தெளிவான காட்சியமைப்புகள் இருந்திருந்தால் ரசித்திருக்கலாம். கிருஷ்ண பிரசாத் துவாரகா இசையில் பாடல்கள் எதுவும் ரசிக்கும் வகையில் இல்லை. பின்னணி இசையும் எடுபடவில்லை.
மொத்தத்தில் ‘அந்த குயில் நீதானா’ குரல் ஒலிக்கவில்லை.