கல்லூரி மாணவியான தேஜஸ்வினியின் பெற்றோர் ஒரு கல்யாணத்திற்காக வெளியூர் செல்கிறார்கள். மிகப்பெரிய வீட்டில் தேஜஸ்வினி தனியாக இருப்பதை அறிந்த அவளுடைய காதலன் நவ்தீப், அவளைப் பார்க்க அந்த வீட்டிற்கு வருகிறான். அங்கு இருக்கும் தவளை மாதிரியான ஒரு பொம்மையை பார்க்கும் நவ்தீப், அது என்னவென்று தேஜஸ்வினியிடம் கேட்கிறான்.
அதற்கு அவள், அந்த வீட்டை கட்டியவர்கள் செண்டிமென்டுக்காக அதை வைத்திருப்பதாக கூறுகிறாள். இதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளும் நவ்தீப், அந்த பொம்மையை தனது காலால் எட்டி உதைக்கிறான். இதன்பின்னர், அங்கு கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வெளியே கிளம்புகிறான். பின்னர், அந்த வீட்டில் சில அமானுஷ்ய சம்பவங்கள் எல்லாம் நடக்க ஆரம்பிக்கிறது.
பியானா வாசிக்கும் சத்தம், 10 நிமிடத்திற்கு ஒருமுறை வீட்டு கதவை தட்டும் சத்தம், பாத்ரூமில் பேய்களின் அலறல், குழாயில் தண்ணீர் விடாமல் சொட்டுவது என தொடர்ந்து நடப்பது ஹீரோயினை ரொம்பவும் பயமுறுத்துகிறது. இதனால், துணைக்கு தனது காதலன் நவ்தீப்பை வரவழைக்கிறாள்.
அவன் வந்ததும் நாயகி சொல்வது எதையும் நம்பவில்லை. இருந்தாலும், முதலில் தண்ணீர் சொட்டும் குழாயை சரிசெய்ய பிளம்பரை வரவழைக்கிறான். பிளம்பர் ஒரு மந்திரவாதியைப் போல இருக்கவே, தேஜஸ்வினி மேலும் பயப்படுகிறாள். மேலும், அந்த வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியும், அவளது தம்பியும் சேர்ந்துகொண்டு காட்சிக்கு காட்சி இவர்களை பயமுறுத்துகிறார்கள்.
உண்மையில் அந்த வீட்டில் என்ன நடக்கிறது? பயமுறுத்துபவர்கள் யார்? அந்த தவளை பொம்மைக்கும், அமானுஷ்ய விஷயங்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகன் நவ்தீப், நாயகி தேஜஸ்வினி உள்ளிட்ட மொத்த 6 பேர் தான் மொத்த கதாபாத்திரங்கள். இதில் நவ்தீப் சிறப்பாக நடித்திருக்கிறார். தேஜஸ்வினி படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார். படம் முழுக்க கவர்ச்சி ஆடையிலேயே வலம்வந்து ரசிகர்களை சுண்டியிழுத்திருக்கிறார். அவருடைய பயம் நம்மையும் சேர்த்து பயமுறுத்துகிறது.
வேலைக்காரியாக வருபவரின் பார்வையே மிரட்டலாக இருக்கிறது. பேய் கிழவியின் மேக்கப்பும் அபாரமாக இருக்கிறது. பிளம்பரமாக வருபவரின் ஆக்ஷன் காட்சிகளும் மிரட்டியிருக்கிறது.
ஐதராபாத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கதையாக வைத்து உருவாகியிருக்கிறார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. காட்சிக்கு காட்சி மிரட்டலாக இருக்கிறது. பிளோ கேம் என்னும் புதுவிதமான கேமரா மூலம் மொத்த படத்தையும் பதிவாக்கியிருக்கிறார். அதேபோல், மிகக்குறைந்த பட்ஜெட்டிலும் தரமான படத்தை கொடுக்க முடியும் என்பதற்கு உதாரணமாய் திகழ்ந்திருக்கிறார்.
பிரத்யோதனின் இசையும், பிரதாப் குமார் சங்காவின் படத்தொகுப்பும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. மிரட்டல் காட்சிகளில் வரும் பின்னணி இசை மிரட்டியிருக்கிறது. ஆஞ்சியின் ஒளிப்பதிவு படத்திற்கு முதுகெலும்பாய் இருக்கிறது.
மொத்தத்தில் ‘சாக்கோபார்’ மிரட்டலான ருசி.