எட் வாரன், லோரைன் வாரன் தம்பதியருக்கு ஆவிகள் இருப்பதை உணரக்கூடிய சக்தி இருக்கும். அதனால் சர்ச் நிர்வாகம் இவர்களை அமானுஷ்ய சக்திகளால் பாதிப்புக்குள்ளாகும் வீடுகளுக்கு அனுப்பி, அங்கு இவர்கள் தங்கி, அங்கே இருக்கும் தீய ஆவிகளை விரட்டியடிக்கும் பணியை ஒப்படைக்கும். அப்படி இவர்கள் ஏகப்பட்ட வழக்குகளை சந்தித்துள்ளனர். அவர்கள் சந்தித்த ஒரு பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உண்மை கதையைத்தான் ‘தி கான்ஜுரிங்’ முதல் பாகமாக கொடுத்திருத்திருந்தார் ஜேம்ஸ் வான்.
அந்த படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள ‘தி கான்ஜுரிங்-2’ படமும் லண்டனில் ஒரு குடும்பம் சந்தித்த அமானுஷ்ய சக்தியின் பாதிப்புகளை எடுத்துக் காட்டியுள்ளது. பெக்கி ஹாட்ஸன் கணவனை பிரிந்து லண்டணில் தனது 4 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பெக்கி ஹாட்ஸன் குழந்தைகளில் ஒரு குழந்தையின் உடலில் வயதான ஆவி ஒன்று புகுந்து விடுகிறது. இதையடுத்து அந்த வீட்டில் அமானுஷ்ய சப்தங்களும், வீட்டிலுள்ள பொருட்களும் சேதமாகின்றன.
இதனால் பயந்துபோன பெக்கி ஹாட்ஸன் தனது குழந்தைகளுடன் பக்கத்து வீட்டில் பாதுகாப்புக்கு தஞ்சம் புகுகிறார்கள். இதையடுத்து பெக்கி ஹாட்ஸன், பேய்களை விரட்டியடிக்கும் எட் வாரன், லோரைன் வாரன் ஆகியோரின் உதவியை நாடுகிறார் பேய்கள் விரட்டுவதை கைவிட நினைக்கும் இந்த தம்பதியர், பெக்கி ஹாட்ஸனின் உதவியை மறுக்க முடியாமல் அவர்களுக்கு உதவ முன்வருகிறார்கள்.
இதன்பிறகு அந்த வீட்டிற்கு வரும் எட் வாரன், லோரைன் வாரன் ஆகியோர் அந்த வீட்டில் எந்த அமானுஷ்ய சக்தியும் இல்லை. அந்த வீட்டில் உள்ள சின்ன குழந்தை விளையாட்டுக்காக இந்த மாதிரி வேலைகளையெல்லாம் செய்கிறது என்று நினைத்து அங்கிருந்து புறப்படுகிறார்கள். உண்மையில், அந்த குழந்தை விளையாட்டுக்காக அமானுஷ்ய சக்தி போன்று நாடகம் ஆடியதா? அல்லது உண்மையிலேயே ஒரு ஆவி அந்த வீட்டில் இருந்ததா? என்பதை திகிலுடன் சொல்லும் படமே ‘தி கான்ஜுயரிங் 2’.
வழக்கமான திகில் படங்களில் இருந்து ‘தி கான்ஜுரிங்’ படம் தனித்து நிற்பதற்கு காரணம், உண்மை சம்பவங்களை பின்னணியாக வைத்து, அதை ரசிகர்களுக்கு ஏற்றவாறு சுவாரஸ்யமாக கொடுப்பதுதான். முந்தைய பாகத்தை எந்தளவுக்கு திகிலாக கொடுத்தாரோ, அதே அளவுக்கு ரொம்பவும் திகிலாக இரண்டாம் பாகத்திலும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் வான்.
கொடூரமான எந்த கொலைகளும் இல்லாமல் ஒரு பேய் படத்தால் ரசிகர்களை திகிலடைய செய்ய முடியும் என்பதற்கு இப்படம் ஒரு சான்று. வெறும் பயமுறுத்தலோடு நின்றுவிடாமல், வாரன் தம்பதிகளிடையே இருக்கும் காதல், பெக்கி ஹாட்ஸன் குடும்பத்தினரின் பாசம் என குடும்பங்களை கவரும் வகையிலும் படமாக்கியிருப்பது சிறப்பு.
ஜேம்ஸ் வானின் காட்சிக்கு அழகான ஒளிப்பதிவு செய்திருக்கிறார் டான் பர்கெஸ். அவருக்கு பக்கதுணையாக ஜோசப் பிஷாராவின் இசையமைப்பும் சேர்ந்து படத்திற்கு இரு தூண்களாய் நின்று படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. முதல் பாகத்தை போலவே, இந்த பாகத்திலும் வாரென் தம்பதியாக வரும் பாட்ரிக் வில்சனும், வேரா பர்மிகாவும் அசத்தியிருக்கிறார்கள். அதேபோல் குழந்தை நட்சத்திரம் ஜேனட் ஹாட்ஸனாக நடித்திருக்கும் மெடிஸன் வுல்பும் யதார்த்தமாக நடித்துள்ளார்.
மொத்தத்தில் ‘தி கான்ஜுரிங் 2’ - பேய் பட விரும்பிகளுக்கு விருந்து.