பிரேசில் நாட்டில் ரியோ நகரின் அருகே உள்ள கடல் பகுதியில் சுறா ஒன்று கப்பல்களை அழித்து வருகிறது. இலியானா டாக்லஸ் என்னும் ஆராய்ச்சியாளர் இந்த வகை சுறாக்கள் ஏற்கனவே அழிக்கப்பட்ட நிலையில், எப்படி வந்தது என்று ஆராய்ச்சி செய்கிறார். ஆனால், கடற்படை தளபதியோ அந்த சுறாவை அழிக்க ஒரு குழுவை ஏற்பாடு செய்கிறார்.
மறுபக்கம் உக்ரைன் நாட்டில் ரஷியர்களால் அமெரிக்காவை அழிக்க உருவாக்கப்பட்ட எந்திர மனிதன், ஒரு கடத்தல் கும்பல் மூலம் எதிர்பாராத விதமாக இயக்கப்படுகிறான். உடனே அந்த எந்திர மனிதன் அமெரிக்காவை அழிக்க புறப்படுகிறான்.
சுறாவையும் எந்திரனையும் அழிக்க ராணுவம் தீவிர முயற்சி மேற்கொள்கிறது. சுறாவும் எந்திரனும் ஒரு கட்டத்தில் நேருக்கு நேர் மோதுகிறது. இந்த சண்டையின் முடிவு என்ன? சுறாவையும் எந்திரனையும் ராணுவம் அழித்ததா? என்பதே மீதிக்கதை.
சுறாக்களை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த வகையில் இப்படத்தை எந்திர மனிதனுடன் சேர்த்து உருவாக்கியிருக்கிறார்கள். கடந்த வருடம் மெகா ஷார்க் வெர்சஸ் கொலசஸ் என்ற பெயரில் வெளியான ஆங்கில படம் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு சுறாவை தாக்கும் எந்திரனாக வெளியாகியிருக்கிறது.
இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமாண்டமாக பேசும் அளவிற்கு எடுபடவில்லை. சிறிய பட்ஜெட்டில் உருவான ஹாலிவுட் படமாக இருக்கிறது. ஏற்கனவே சுறாவை வைத்து பல பாகங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த படங்களை காட்டிலும் இப்படத்தை ஓரளவே ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘சுறாவை தாக்கும் எந்திரன்’ தாக்கம் குறைவு.