தேனி மாவட்டத்தில் உள்ள கிராமத்து ஆசிரியரின் மகன் நாயகன் வெங்கட். கல்லூரிப் படிப்பை முடிக்காமல் பல அரியர்ஸ் வைத்துள்ள இவர் நண்பர்களுடன் சுற்றி வருகிறார். நாயகி சாந்தியின் தந்தை அதே ஊரில் பெரிய தொழிற்சாலை நடத்தி வருகிறார். இதிலிருந்து வெளிவரும் கழிவுகளால் கிராமம் பாதிக்கப்படுகிறது. கிராமத்தின் மீது அதிக அக்கறை கொண்டிருக்கும் நாயகனின் தந்தை இதனை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார். இதனால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது.
இந்நிலையில், வெங்கட் படித்த அதே கல்லூரியில் நாயகி சாந்தி முதலாமாண்டு சேருகிறார். இவரை பார்த்தவுடன் வெங்கட் காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் சாந்தியிடம் தன்னுடைய காதலை சொல்லி அவரும் விரும்புவதாகக் கூற, இருவரும் காதலித்து வருகிறார்கள். இவர்களின் காதலுக்கு வெங்கட்டின் தந்தை பச்சை கொடி காட்டுகிறார். ஆனால், சாந்தியின் தந்தையோ வெங்கட்டை மிரட்டுகிறார்.
மேலும் வெங்கட்டிடம் ‘உன் கண் முன்னே அவளை வேறொருவனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன்’ என்று சவால் விடுகிறார். இதனால் ஆத்திரமடையும் வெங்கட், ‘வேறு யாராவது சாந்தியை திருமணம் செய்தால் அவன் கையை வெட்டுவேன்’ என்று எதிர் சவால் விடுகிறார்.
இந்த சவாலில் வென்றது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்கள். தங்களால் முடிந்த வரை நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நாயகனாக நடித்திருக்கும் வெங்கட் கதாபாத்திரத்தை உணர்ந்து பொறுப்புடன் நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சாந்தி, காதலுக்காக அப்பாவையே ஏமாற்றும் கதாபாத்திரத்தை ஏற்று யதார்த்தமாக செய்திருக்கிறார்.
வெங்கட்டுக்கு அப்பாவாக நடித்திருப்பவர் பொறுப்பான ஆசிரியராகவும் சமூக ஆர்வலராகவும் மனதில் பதிகிறார். சாந்திக்கு அப்பாவாக நடித்திருப்பவர் காமெடி கலந்த வில்லத்தனத்தில் ரசிகர்களை கவர்கிறார்.
சிறிய பட்ஜெட்டில் நல்ல நட்பு, காதல் என ரசிகர்கள் விரும்பும் வகையில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீஜர்.
ஜோ மற்றும் ஸ்மித் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். திருநாவுக்கரசின் ஒளிப்பதிவை ஓரளவு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘எடால்’ கலகலப்பு.