நாயகன் அரவிந்த்தின் அம்மா கும்பகோணத்தில் மிகப்பெரிய போலீஸ் அதிகாரி. அவருடைய அப்பா ஒரு ஓவியர். இவர்கள் இருவரும் தங்கள் வேலைகளில் பிசியாக இருப்பதால், நாயகன் மீது சரியான பாசம் காட்ட முடியவில்லை. இதனால், நண்பர்களே கதியென்று கிடக்கும் நாயகனை ஒருமுறை நண்பர்களே அவனுடைய அம்மாவிடம் ஈவ் டீசிங் கேசில் மாட்டி விடுகின்றனர்.
இதனால், கோபமடைந்த நாயகனின் அம்மா நடுரோட்டில் வைத்து அவனை அடித்து அவமானப்படுத்துகிறார். அவமானத்தால் வீட்டை விட்டு வெளியேறும் நாயகன், பக்கத்து ஊருக்கு சென்று அங்கு வசிக்கும் நரேனிடம் போய் வேலைக்கு சேர்கிறார். நரேனுடைய மகளான நாயகி சுஷ்மா மீது நாயகன் காதல் வயப்படுகிறார்.
இந்நிலையில், காணாமல் போன மகனைத் தேடி போலீஸ் அதிகாரியான நாயகனின் அம்மா, நரேனின் ஊருக்கு வந்து நாயகனை தன்னுடன் வருமாறு அழைக்கிறார். ஆனால், நாயகனோ தனது அம்மாவுடன் செல்ல மறுக்கிறார். இறுதியில் என்ன நடந்தது? நாயகனின் காதல் என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.
நாயகன் அரவிந்த் படம் முழுக்க அப்பாவி முகத்துடன் வலம் வந்திருக்கிறார். புதுமுகம் என்பதால் இவரிடம் அதிகம் நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருப்பினும், பாசத்துக்காக ஏங்கும் மகனாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.
நாயகி பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழைய நடிகையை நினைவுபடுத்துகிறார். அதேபோல் துள்ளலான நடிப்பிலும் கவர்கிறார். அப்பாவுக்கும் மகளுக்கும் உள்ள நெருக்கமான உறவை வெளிப்படுத்தும் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். நரேன் நீதிபதியாகவும், விவசாயியாகவும் தனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் நடித்து கைதட்டல் பெறுகிறார். சிங்கம் புலி வரும் காட்சிகள் வழக்கம்போல் கலகலப்பு. பஞ்சு சுப்பு காட்டும் வில்லத்தனம் ஏற்கும்படியாக இல்லை.
இயக்குனர் அழகப்பன் இப்படத்தில் நரேன், சிங்கமுத்து, சுப்பு பஞ்சு என நல்ல நடிகர்களை வைத்துக்கொண்டு ஒரு அழகான படத்தை கொடுத்திருக்கலாம். ஆனால், இவர்களுக்குண்டான காட்சிகளையே ஒழுங்காக எடுக்காமல் இழுஇழுவென்று இழுத்திருப்பது படத்தை பார்க்கவிடாமல் செய்கிறது.
குரு கல்யாண் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையிலும் எந்தவித உணர்வும் இல்லை. அருள் ஒளிப்பதிவு ஓரளவுக்கு பரவாயில்லை.
மொத்தத்தில் ‘குகன்’ வெட்டி பந்தா.