கொடைக்கானலில் தன்னுடைய அப்பாவுடன் வசித்து வந்த ரமேஷ், அப்பா இறந்த பிறகு தனி மரமாக இருந்து வருகிறார். இவரின் அப்பாவிற்கு சொந்தமாக வீடு வாங்குவது பெரிய கனவாக இருந்திருக்கிறது.
ஒரு ஹோட்டலில் வேலை செய்து வரும் ரமேஷ் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, புரோக்கர் மூலமாக 2 கோடி மதிப்புள்ள ஒரு வீட்டை 50 லட்சம் ரூபாய்க்கு சொந்தமாக வாங்கி குடியேறுகிறார். அன்று இரவு அந்த வீட்டில் ஒரு ஆவி இருப்பது போல் ரமேஷ் உணர்கிறார். மேலும் அந்த ஆவி, ரமேஷை மிகவும் தொந்தரவு செய்கிறது.
இந்த ஆவியை சமாளிக்க பல முயற்சிகள் செய்கிறார். ரமேஷின் உதவிக்கு வந்த போலீஸ், நண்பர்கள், பூசாரி என அனைவரையும் விரட்டி அடிக்கிறது. ஒரு வழியாக அந்த வீட்டை விற்று விடலாம் என்ற முடிவு வருகிறார் ரமேஷ். ஆனால் அந்த ஆவி வீடு பார்க்க வருபவர்களையும் விரட்டுகிறது.
இறுதியில் ரமேஷ் அந்த வீட்டை விற்றாரா? அந்த ஆவி யார்? எதற்காக ரமேஷை அந்த ஆவி பாடாய் படுத்துகிறது என்பதே மீதிக்கதை.
பத்து வருடங்களுக்கு முன்பு ரமேஷ் நடிப்பில் ஜித்தன் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த வெற்றியின் காரணமாக ஜித்தன் 2ம் பாகம் வெளியாகியிருக்கிறது. முந்தைய பாகத்தை விட இந்த பாகத்தில் ஜித்தன் ரமேஷ் நன்றாகவே நடித்திருக்கிறார். இவரை சுற்றியே முழு படமும் நகர்கிறது. கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கேவிற்கு படத்தில் பெரியதாக வேலை இல்லை. பாதி நேரம் பேயாக வந்து மிரட்ட முயற்சித்திருக்கிறார். இவரை பேயாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
போலீசாக வரும் ரோபோ சங்கர், மனநல மருத்துவராக வரும் மயில்சாமி உள்ளிட்ட பலரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
பேய்கள் என்பது பயமுறுத்துவது அல்ல, அதுவும் நல்ல ஆத்மா என்று சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் ராகுல். ஜித்தன் முதல் பாகத்தில் கண்ணுக்கு தெரியாத ஒருவரை வைத்து படமாக்கியிருந்தார்கள். இதில் ஆவியை வைத்து பயமுறுத்த முயற்சித்திருக்கிறார்கள். ஜித்தன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதுபோல் ஜித்தன் 2வும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ரசிகர்களை கவரும் படியாக அமையாதது வருத்தமளிக்கிறது.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மிட்செல்லின் ஒளிப்பதிவு பெரியதாக எடுபடவில்லை.
மொத்தத்தில் ‘ஜித்தன் 2’ சுவாரஸ்யம் குறைவு.