திருமண விழாவை நடத்தி முடிக்க தேவையான அனைத்து பணிகளையும் செய்து தரும் நாயகன் அபய் கிருஷ்ணா, கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார். ஒரு நாள் நாயகி அபிநயாவை சந்திக்கும் அவர், திருமணம் தொடர்பான பணிகளுக்கு தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ளும்படி, செல்போன் நம்பரை கொடுக்கிறார். அதன்பின்னர், அபிநயா தன் தோழியின் திருமணத்தை நடத்தி வைக்கும்படி அபய் கிருஷ்ணாவிற்கு போன் செய்து அழைக்கிறார்.
அதன்படி திருமணத்திற்கு தேவையான பொருட்களை கடன் வாங்கி செய்கிறார். மணப்பெண்ணை அபய் கிருஷ்ணா கோவிலுக்கு அழைத்து செல்லும்போது, அங்கு வேறொருவரை திருமணம் செய்துக் கொள்கிறார் மணப்பெண். இதற்கு அபய் கிருஷ்ணா தான் காரணம் என்று நினைக்கும் பெண்வீட்டார், அவர் செய்த வேலைகளுக்கு பணம் தர மறுக்கிறார்கள். இதனால், தான் மேலும் கடனாளி ஆவதற்கு அபிநயாதான் காரணம் என்று அவர் மீது ஆத்திரமடைகிறார்.
இந்நிலையில், அபய் கிருஷ்ணாவின் தாய் ஊர்வசிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. பணம் தேவைப்படும் நேரத்தில் அபிநயா உதவி செய்கிறார். மேலும் அபய் கிருஷ்ணாவின் கடனை அடைப்பதற்கு உதவி செய்வதாகவும் கூறுகிறார். தனக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக கூறும் அவர், ஜாதகத்தில் பொருத்தம் இல்லை என்று கூறினால் பணம் தருவதாக கூறுகிறார்.
அதன்படி கொடைக்கானல் செல்லும் அபய் கிருஷ்ணாவை மாப்பிள்ளை கடத்தி வைத்து, ஜாதகம் பொருத்தமாக இருப்பதாக கூறச்சொல்கிறார். மேலும் 10 லட்சம் பணம் தருவதாகவும் கூறுகிறார்.
இவர்களுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் அபய் கிருஷ்ணா இறுதியில் அபிநயாவிற்காக உதவி செய்தாரா? அல்லது அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு மாப்பிள்ளைக்கு உதவி செய்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அபய் கிருஷ்ணா, புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு நடித்திருக்கிறார். பல காட்சிகளில் அனுபவம் வாய்ந்த நடிகர் போல் நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அபிநயாவின் நடிப்பைப் பற்றி சொல்லவே தேவையில்லை. கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்.
ஊர்வசி, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் அனுபவ நடிப்பால் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
வித்தியாசமான திரைக்கதையை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அன்பு ஸ்டாலின். அதற்கேற்ப திறமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து சுவாரஸ்யமான காட்சிகளை கண்முன் நிறுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
அபிஷேக் லாரன்ஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன. பின்னணி இசையையும் நன்றாக அமைத்திருக்கிறார். அன்பு ஸ்டாலினின் ஒளிப்பதிவும் பார்க்கும் படியாக உள்ளது.
மொத்தத்தில் ‘அடிடா மேளம்’ சிறப்பான தாளம்.