ஏலியனுக்கும் சூப்பர்மேனுக்கும் சண்டை ஏற்படுகிறது. இந்த சண்டையில் பேட்மேன் வசிக்கும் ஊரான காதம் நகரில் ஏராளமான பொருட்சேதம் ஏற்படுவதுடன் பேட்மேனுக்கு நெருங்கியவர்கள் இறந்துபோகிறார்கள். இதனால் சூப்பர்மேன் மீது பேட்மேனுக்கு தவறான அபிப்ராயம் ஏற்படுகிறது.
இதற்கிடையே வில்லன் லெக்ஸ் லூதர் சூப்பர்மேனை அழிக்க கூடிய கிரிப்டான் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக சூப்பர்மேன் மீது வீண் பழிகள் சுமத்தி, அவர் மீது மக்கள் வைத்துள்ள நல்லெண்ணத்தை கெடுத்து வருகிறார். சூப்பர்மேனால் நிகழ்ந்த பாதிப்புகளுக்கு சூப்பர்மேன் விளக்கம் அளிக்க வேண்டும் என அரசு அறிவிக்கிறது. இதற்காக சூப்பர் மேன் விளக்கம் அளிக்க வரும் நிலையில், லெக்ஸ் லூதர் சதி செய்து கட்டிடத்தை வெடிக்க வைத்து விடுகிறார். இதற்கும் சூப்பர்மேன் தான் காரணம் என்று மக்கள் கோபப்பட்டு, இந்த நாட்டுக்கு சூப்பர்மேன் தேவையில்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
அதேசமயம் கிரிப்டான் இருக்கும் இடத்தை தெரிந்துக் கொண்ட லெக்ஸ் லூதர், அதை கைப்பற்ற நினைக்கிறார். அது லெக்ஸ் லூதர் கையில் கிடைத்தால், விளைவுகள் அதிகமாக ஏற்படும் என்று எண்ணிய பேட்மேன் அதை எடுக்க செல்கிறார். அப்போது சூப்பர்மேன் அவரை தடுத்து நிறுத்துகிறார். பின்னர் கிரிப்டானை ஒரு வழியாக கைப்பற்றுகிறார் பேட்மேன்.
இதையறித்த லெக்ஸ் லூதர், சூப்பர்மேனின் தாயை கடத்தி வைத்துக் கொண்டு, பேட்மேனை கொன்றால்தான் விடுவிப்பேன் என மிரட்டுகிறார். தாயை மீட்பதற்காக பேட்மேனிடம் சண்டை போடுகிறார் சூப்பர்மேன். இந்த மோதலில் யார் வென்றது? லெக்ஸ் லூதரின் தந்திரத்தை சூப்பர்மேனும், பேட்மேனும் தெரிந்துக்கொண்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் பேட்மேனாக நடித்திருக்கும் பென் அப்லெக்கும், சூப்பர்மேனாக நடித்திருக்கும் ஹென்றி காவிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சூப்பர்மேனும் பேட்மேனும் சண்டை போடும் காட்சிகள் அபாரமாக இருக்கிறது. குறிப்பாக இறுதியில் வரும் சண்டைக் காட்சி ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
படம் நீளமாக இருந்தாலும், காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் படியாக இருப்பதால் நேரம் போவது தெரியாமல் இருக்கிறது. 3டி தொழில் நுட்பத்துடன் பார்க்கும் போது காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமாக தெரிகிறது. பேட்மேன் ரசிகர்களையும், சூப்பர்மேன் ரசிகர்களையும் கவரும் படியாக படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜேக் ஸ்னைடர். லாரி பாங்கின் ஒளிப்பதிவும், ஹான்ஸ் சிம்மரின் இசையும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.