ஒரு கிராமத்தில் ஊர் சேர்மனும், தலைவரும் சேர்ந்து ஊரையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். இந்த ஊரில் ஜாதி பிரச்சனை அடிக்கடி எழுகிறது. ஜாதி மாறி திருமணம் செய்பவர்களை சேர்மனும், தலைவரும் யாருக்கும் தெரியாமல் கொலை செய்கிறார்கள். ஊரில் இருக்கும் இன்ஸ்பெக்டர் இவர்கள் ஜாதி என்பதால் போலீசும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
இந்த ஊரில் அம்மாவை சிறுவயதில் இழந்து அக்காவின் அரவணைப்பில் வளர்கிறார் நாயகன் யுவன். இவருடைய அப்பா எந்த வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு நேரத்தை கழித்து வருகிறார். வளர்ந்து பெரியவனாக மாறிய யுவன் திருப்பூரில் சென்று வேலை பார்க்கிறார். அங்கு நாயகி சந்தனா, யுவனை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார். ஆனால் யுவனோ இதை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்.
இந்நிலையில், ஊரில் கல்குவாரியில் வேலை செய்யும் அக்கா, தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவரை காதலிக்கிறார். திருமணம் செய்ய முயற்சிக்கிறார்கள். இந்த விஷயம் சேர்மனுக்கும் தலைவருக்கும் தெரிந்து இருவரையும் கொலை செய்து விடுகிறார்கள். இது யுவனுக்கு தெரியவந்து சேர்மனையும் தலைவரையும் பழி வாங்க துடிக்கிறார்.
இறுதியில் தன்னுடைய அக்காவை கொலை செய்தவர்களை யுவன் பழி வாங்கினாரா? நாயகி சந்தனாவுடன் காதலில் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் யுவன் கிராமத்து இளைஞனாக பளிச்சிடுகிறார். தன்னுடைய அக்காவை கொலை செய்தவர்களை பழி வாங்க துடிக்கும் இவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. அக்காவாக நடித்திருப்பவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அக்காவிற்கு உண்டான பாசத்துடனும், அரவணைப்புடனும் நடித்திருக்கிறார்.
நாயகி சந்தனாவிற்கு கதாபாத்திரம் சிறிதளவு என்றாலும் அதை செவ்வனே செய்திருக்கிறார். வில்லன்களாக நடித்திருக்கும் சேர்மனும், தலைவரும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.
ஜாதி பிரச்சனையை அடிப்படையாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாரதி கிருஷ்ண குமார். படத்தில் காட்சிகளை சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். இன்னும் ஊர்களில் ஜாதி பிரச்சனைகள் இருக்கிறது, எப்போது ஜாதி பிரச்சனை அழியும் என்பதை சொல்ல வந்த இயக்குனருக்கு பெரிய கைதட்டல்.
இரா பிரபாகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். எஸ்.பி.மணியின் ஒளிப்பதிவை ஓரளவு ரசிக்கலாம்.
மொத்தத்தில் ‘என்று தணியும்’ சிறப்பு.