வாலாஜா பேட்டையில் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் ஜெய். மறைந்த இவருடைய அப்பா ஊரில் எந்த பிரச்சனை வந்தாலும் முதலில் நின்று தீர்த்து வைப்பார். அதேபோல் ஜெய்யும் ஊரில் நடக்கும் பிரச்சனைகளை தட்டிக் கேட்கிறார்.
இவர் ஊரில் இருக்கும் மைதானத்தில் நண்பர்களுடன் அடிக்கடி கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். இந்த மைதானத்தில் விளையாடி பயிற்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை கிடைக்கிறது. இதனால் இந்த மைதானத்தை ஒரு சென்டிமென்டாக நினைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் சேர்மன் மாரிமுத்து மூலம் அந்த மைதானத்தை அமைச்சர் அபகரிக்க திட்டமிடுகிறார். இதற்கு ஜெய் எதிர்ப்பு தெரிவிக்கிறார். மைதானத்தை அகபரிக்க பல வழிகளில் சேர்மன் மாரிமுத்து திட்டமிட்டாலும், எதற்கும் பயப்படாத ஜெய் அதற்கு முட்டுக்கட்டை போட்டு தடுக்கிறார்.
இறுதியில் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியில் இருந்து அந்த மைதானத்தை ஜெய் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜெய், துடிப்பான இளைஞனாகவும், ஊர் மீது அக்கறை கொண்டவராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக நட்பிற்கு மரியாதை கொடுக்கும் இடத்தில் திறமையாக நடித்து கைத்தட்டல் பெறுகிறார். சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகளில் முந்தைய படங்களை விட சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சுரபி மிகவும் துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறார். முந்தைய படங்களில் விட இந்த படத்தில் அழகாக இருக்கிறார். காட்சிகள் குறைவு என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
ஜெய்க்கு அண்ணனாக நடித்திருக்கும் கருணாஸ், பொறுப்பான அண்ணனாகவும், கிளைமாக்ஸ் காட்சிகளில் ரசிகர்களை கண்கலங்கவும் வைத்திருக்கிறார். சேர்மனாக நடித்திருக்கும் மாரிமுத்து யதார்த்த வில்லனாக பளிச்சிடுகிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக அமைந்திருக்கிறது. கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
இயல்பான கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் மணிமாறன், அதில் யதார்த்தம் மீறாமல் பதிவு செய்திருக்கிறார். காட்சிகள் மிகைப்படுத்த படாமல் இயக்கியிருப்பது சிறப்பு. முதல் பாதியில் திரைக்கதை மெதுவாக நகராமல் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
வேல்ராஜின் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளையும் தெளிவாக படம் பிடித்து காண்பித்திருக்கிறது. விவேக்-மெர்வின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் பின்னணி இசையில் மிரட்டியுள்ளனர்.
மொத்தத்தில் ‘புகழ்’ ஜெய்க்கு மட்டும்.