தேனி மாவட்டத்தில் 20 ஆண்டு காலமாக சேர்மன் பதவியில் நீடித்து வருகிறார் ராதாரவி. இவருடைய பதவியை பறிக்க ஒவ்வொரு முறையும் முயன்று தோற்றுப் போகும் முனீஸ்காந்த், எப்படியாவது அந்த பதவியை கைப்பற்ற நினைக்கிறார். இந்நிலையில், அந்த ஊரில் நடக்கும் தேர்த்திருவிழாவில் யார் தேரை இழுப்பது என்பதிலும், அவர்களிடையே பிரச்சினை நீடிக்கிறது.
இந்நிலையில், ராதாரவியின் தம்பி மகனான விமலும், முனீஸ்காந்தின் மருமகளான அஞ்சலியும் காதலிக்கிறார்கள். அதேவேளையில், ராதாரவியின் மகளும், அஞ்சலியின் அண்ணனும் காதலித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஊரைவிட்டு ஓடிச் செல்லவும், இரு குடும்பத்துக்கும் இருக்கும் பகை மேலும் அதிகமாகிறது. இதன் காரணமாக, அஞ்சலி-விமல் காதலிலும் சிறு விரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில், சேர்மன் தேர்தல் வருகிறது. இந்த முறை சேர்மன் பதவிக்கு ராதாரவிக்கு பதிலாக விமலும், முனீஸ்காந்துக்கு பதிலாக அஞ்சலியும் களம் இறங்குகிறார்கள். இறுதியில், இந்த தேர்தலில் வென்றது யார்? விமல்-அஞ்சலி காதல் என்னவாயிற்று? குடும்ப பகை தீர்ந்ததா? என்பதே மீதிக்கதை.
விமலுக்கு காமெடி படம் என்றால் சொல்லிக் கொடுக்க தேவையில்லை. அதுபோல், இந்த படத்தில் மிகவும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். படத்திற்கு படம் கொஞ்சம் மெருகேறிக்கொண்டே வருகிறார் என்றுதான் சொல்லவேண்டும். அதேபோல், இந்த படத்தில் அஞ்சலியும் மிகவும் அழகாக இருக்கிறார். படம் முழுக்க சேலையிலேயே வருகிறார். நடிப்பிலும் நன்றாக மெருகேறியிருக்கிறார். தொடர்ந்து அவருக்கு கோலிவுட்டில் வாய்ப்பு கிடைக்கும் என நம்பலாம்.
ஒரு பக்கம் சூரி, காளி சேர்ந்து அரட்டை செய்தாலும், மறுபுறம் முனீஸ்காந்த் தனியாளாக நின்று காமெடியில் கலக்கியிருக்கிறார். ராதாரவி பேசும் வசனங்களில் அனல் பறக்கிறது. ஜெயப்பிரகாஷ் அமைதியாக வந்து போயிருக்கிறார். மற்றபடி, படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் நிறைவாக இருக்கிறது.
குடும்பப் பாங்கான ஒரு நகைச்சுவை படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜசேகர். தனது முதல் படத்திலேயே வெற்றிப்பட இயக்குனர் என்று பெயர் எடுத்துவிட்டார். குடும்பங்களுக்குள் இருக்கும் பகையை சொன்ன படங்கள் பல வந்தாலும், இந்த படம் ஒரு புதுக் கதைக்களத்தோடு பயணிப்பது சிறப்பு. பல காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைப்பது படத்திற்கு பெரிய பலம்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். குறிப்பாக, சிவகார்த்திகேயன், அனிருத் சேர்ந்து பாடியுள்ள பாடல் கேட்பதற்கு மட்டுமில்லாமல், பார்க்கும்போது அழகாக இருக்கிறது. தருண்பாலாஜியின் ஒளிப்பதிவு மிகவும் கலர்புல்லாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘மாப்ள சிங்கம்’ கெத்தாக வலம் வருவான்.