அம்ஜத் கானும், ரேஷ்மி மேனனும் காதலர்கள். அதேபோல், ராஜ் பரத்தும், தேஜஸ்வியும் காதலர்கள். இவ்விரு ஜோடிகளும் ஒருநாள் பப்பில் சந்திக்கின்றன. அப்போது, ரேஷ்மி மேனனுக்கு சிறு பிரச்சினை ஏற்படவே, அவரை ராஜ்பரத் காப்பாற்றுகிறார். பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்யும்போது, அம்ஜத் கானும், ராஜ் பரத்தும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்பது தெரிய வருகிறது. இதனால், இவர்கள் நான்கு பேரும் நெருங்கிய நண்பர்களாகிறார்கள். எங்கு சென்றாலும் நான்கு பேரும் சேர்ந்தே செல்கின்றனர்.
இந்நிலையில், ரேஷ்மி மேனை திருமணம் செய்ய அம்ஜத் கான் திடீர் முடிவெடுக்கிறார். இதனால் ரேஷ்மி மேனன் வீட்டை விட்டு வெளியேறுவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, அம்ஜத் கான் பேச்சை நம்பி ரிஜிஸ்டர் ஆபீசுக்கு வருகிறாள்.
ஆனால், அம்ஜத் கானோ, வெளிநாட்டில் இருக்கும் தனது அப்பாவுக்கு ஒரு பிரச்சினையென்று ரேஷ்மி மேனனிடம் எதுவும் சொல்லாமல் வெளிநாடு சென்றுவிடுகிறார். ரிஜிஸ்டர் ஆபீசுக்கு வந்து காத்திருக்கும் ரேஷ்மி மேனன், அம்ஜத் கானை தொடர்புகொள்ள முடியாமல் தவிக்கிறார்.
திரும்பி தன்னுடைய வீட்டுக்கும் செல்லமுடியாது என்பதால் ராஜ் பரத்தின் உதவியை நாடுகிறாள். ராஜ் பரத் அவளை தன்னுடைய வீட்டில் தங்க சம்மதிக்கிறார். இதற்கிடையில், ராஜ்பரத் மற்றும் தேஜஸ்வியின் காதலிலும் சிறு விரிசல் ஏற்படுகிறது.
ராஜ் பரத்தின் வீட்டில் உள்ள அனைவரும் ரேஷ்மி மேனன்தான் அவனுடைய காதலி என்று தவறாக புரிந்துகொள்கிறார்கள். இதற்கிடையில், நோய் வாய்ப்பட்டு கிடக்கும் ரேஷ்மி மேனனின் அப்பாவுக்கு ராஜ் பரத் உதவ, அவருக்கும் ராஜ் பரத் மீது நல்ல அபிப்ராயம் உண்டாகிறது.
ஒருகட்டத்தில் ராஜ் பரத் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட, ரேஷ்மி மேனன், ராஜ் பரத் இருவீட்டாரும் இவர்களுக்கு தெரியாமலேயே இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்துவிடுகிறார்கள். அந்த நேரத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பும் அம்ஜத் கானுக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது.
ராஜ்பரத்தின் காதலியான தேஜஸ்வியும் ராஜ் பரத் மீது மேலும் வெறுப்பு கொள்கிறாள். ஆனால், திருமண நிச்சயம் செய்த விஷயம் தங்களுக்கு தெரியாமலே நடந்துள்ளது என்பதை ராஜ் பரத்தும், ரேஷ்மி மேனனும் அவர்களுக்கு புரிய வைக்க பார்க்கிறார்கள். இறுதியில், யார், யாரை திருமணம் செய்தார்கள் என்பதே மீதிக்கதை.
ஹீரோக்களான அம்ஜத் கானும், ராஜ் பரத்தும் பார்க்க அழகாக இருக்கிறார்கள். படத்தில் இவர்களுடைய நடிப்பு ரொம்பவும் எதார்த்தமாக இருக்கிறது. ஒருவருக்கொருவர் போட்டி போடும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நாயகிகளில் ரேஷ்மி மேனன் அழகான குடும்ப பெண்ணாக மனதில் பதிகிறார். தேஜஸ்வி கவர்ச்சியில் தாராளம் காட்டினாலும், நடிப்பில் ஓ.கே. ரகம் என்று சொல்லும் அளவிற்கு நடித்திருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கர் பாசமிகு அப்பாவாக ரசிகர்களின் மனதில் அழகாக பதிந்திருக்கிறார். இவரை பார்க்கும்போது நமக்கே பரிதாப உணர்வு ஏற்படுவது இவரது கதாபாத்திரத்தின் சிறப்பு. மேலும், படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைவருக்கும் சிறு சிறு காட்சிகள்தான். அவர்கள் அதை சரியாக செய்திருக்கிறார்கள்.
அளவான கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு காதல், நட்பு இரண்டையும் அழகாக சொல்லியிருக்கிறார் ரவிச்சந்திரன். தனது முந்தைய படங்களைப் போலவே இப்படத்திலும் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை கையாண்டிருக்கிறார். படத்தில் எந்தவொரு காட்சியிலும் சினிமாத்தனம் இல்லாமல் ஒவ்வொரு காட்சியையும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். உண்மையில் இந்த படம் காதலர்களுக்கான அழகான படமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.
தீபக் நிலம்பூர் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசை மென்மையாக இருக்கிறது. குருதேவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து.
மொத்தத்தில் ‘நட்பதிகாரம் 79’ நல்ல ரசனை.